வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலைமுடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் இருக்க வெந்தயம், கற்றாழை மட்டும் போதும்..!

Updated On: July 27, 2023 12:36 PM
Follow Us:
Hair Shine Home Remedies
---Advertisement---
Advertisement

Hair Shine Home Remedies

உடல் ஆரோக்கியத்தை எப்படி பராமரிக்க வேண்டுமோ அதே போல தான் முடியையும் பராமரிக்க வேண்டும். முடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று ஆண்களை விட பெண்கள் தான் ஆசைப்படுகின்றனர். இதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை முறையில் பயன்படுத்துவது தான் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதனால் இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கை முறையில் தலை முடியை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் ஆக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

முடி பளபளப்பாக:

Hair Shine Home Remedies

வெந்தயம் முடிக்கு தேவையான அளவு எடுத்து இரண்டு நாட்களுக்கு ஊற வைத்து கொள்ளவும். இரண்டு நாட்கள் கழித்து அரிசி கழுவிய தண்ணீர் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.

ஊறிய வெந்தயத்தை பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி அரைக்கவும்.

அரைத்த உடனே எந்த பேஸ்ட்டையும் தலையில் அப்ளை செய்ய கூடாது. ஏனென்றால், மிக்சியில் அரைத்த ஹீட் இருக்கும். அதனால் கொஞ்சம் நேரம் கழித்து அப்ளை செய்ய வேண்டும். 

அரைத்த பேஸ்ட் ஆறியதும் அதனுடன் அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கையை கொண்டு நன்றாக கலக்கவும்.

தலை முடி வளர்ச்சிக்காக எந்த பேக் அப்ளை செய்வதற்கு முன் தலையில் எண்ணெய் தடவி கொள்ளவும். பிறகு வெந்தய பேஸ்ட்டை தலை முடி முழுவதும் அப்ளை செய்து, 1/2 மணி நேரம் வரை தலையில் அப்படியே ஊறட்டும். பிறகு தலையில் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தேய்த்து குளிக்கலாம்.

இதையும் படியுங்கள் ⇒ நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு இந்த ஹேர் டையை பயன்படுத்துங்க..!

முடி அடர்த்தியாக வளர:

Hair Shine Home Remedies

முடிக்கு தேவையான அளவு கற்றாழை உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த கற்றாழையை வடிகட்டி அதில் இருக்கும் சாறை மட்டும் எடுத்து கொள்ளவும்.

இந்த சாற்றை அப்ளை செய்வதற்கு முன் தலையில் சிக்கு இல்லாமல் எடுத்து கொள்ளவும். பிறகு இதை அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலையை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் அப்ளை செய்து வாருங்கள் தலை முடி அடர்த்தியாக வளரும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் உள்ள இரண்டு பொருட்களை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை