How to Remove Face Pimples Naturally
பொதுவாக முகம் என்றால் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் நாம் எதிர்பார்க்கும் இத்தகைய முறையானது எல்லோருக்கும் இருப்பது இல்லை. ஏனென்றால் இதற்கு எதிர் மாறாக தான் முகத்தில் பருக்கள் வருகிறது. இவ்வாறு பருக்கள் வருவதோடு மட்டும் இல்லாமல் அத்தகைய பருக்கள் காலப்போக்கில் கரும்புள்ளியாகவும் மாறிவிடுகிறது. இந்த பிரச்சனைக்கு என்ன தான் செய்வது என்ற குழப்பம் நிறைய நபர்களுக்கு உள்ளது. ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நிறைய நபர்களுக்கு தெரியாமல் உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் முகத்தில் இருக்கும் பருக்களை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன:
பொதுவாக பருக்கள் ஆனது சாதாரணமாக இருக்கும் முகத்தினை விட எண்ணெய் பசை உள்ள முகத்தில் தான் அதிகமாக காணப்படுகிறது. அவ்வாறு எண்ணெய் பசைகள் காரணமாக முகத்தில் தூசி மற்றும் அழுக்கு போன்றவற்றை படிந்து பின்பு அவை எல்லாம் துளைகளை மாறி முகத்தில் பருக்கள் வர காரணமாக உள்ளது.
இத்தகைய பருக்களை இயற்கையான முறையில் மறைய வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக கீழே பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.குறிப்பு
இதையும் படியுங்கள்⇒ தலை சீவினாலும் மண்டை வெளியில் தெரிகிறதா.. அப்படி என்றால் இதை மட்டும் Follow பண்ணுங்க..
குறிப்பு- 1:
முகத்தில் இருக்கும் பருக்களை மறைய வைப்பதற்கு தேங்காய் எண்ணெய் ஒன்று போதும். அதுமட்டும் இல்லாமல் தேங்காய் எண்ணெயின் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் குளிப்பதற்கு முன்பாகவும் மற்றும் இரவு தூங்க செல்வதற்கு முன்பாகவும் தேங்காய் எண்ணெயினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து அதன் பின்பு மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இப்படி செய்தால் போதும் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறைந்து விடும்.
குறிப்பு- 2:
கற்றாழை ஆனது உடல் தலை முடிக்கு மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்கும், முகத்திற்கு சிறந்த பலனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அதுபோல இத்தகைய கற்றாழையில் நிறைய சத்துக்கள் உள்ளது.
அதனால் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்தால் போதும் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறைந்து விடும். மேலும் பருக்கள் வராமலும் முகத்தை பாதுகாக்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள 2 குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து விடும்.
இதையும் படியுங்கள்⇒ முன் நெற்றியில் மீண்டும் புதிய முடி வளர இந்த இரண்டையும் அப்ளை பண்ணலே போதும்..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tmil |