முக சுருக்கம் போக
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவரும் பிறக்கும் போது இருந்த மாதிரி கடைசிவரையும் இருப்பது இல்லை. ஏனென்றால் காலங்கள் போக போக நமது பழக்க வழக்கம் மற்றும் தோற்றம் அனைத்தும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் சிலர் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் அதனை வெளிப்படுத்தி கொள்ளாமல் இருப்பார்கள். அந்த வரிசையில் முகமும் ஒன்று. நம்முடைய முகத்தில் நமக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க நிறைய மாற்றங்கள் வந்து விடும். அத்தகைய மாற்றங்கள் எதுவும் வெளியில் தெரியாமல் முகத்தில் எந்த விதமான சுருக்கமும் இல்லாமல் முகம் என்றும் இளமையுடன் இருக்க என்ன செய்வது என்பது தான் பலருடைய யோசனையாக இருக்கிறது. அதனால் இன்றைய பதிவில் முகத்தில் சுருக்கம் எதுவும் வராமல் முகம் என்றென்றும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
How to Remove Face Wrinkles Permanently:
முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் மற்றும் முகச்சுருக்கம் எதுவும் மீண்டும் முகத்தில் வராமல் இருப்பதற்கும் முதலில் பாதாமை வைத்து ஒரு Face Pack தயார் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- பாதாம்- 10
- கற்றாழை- சிறிய துண்டு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி வால் போல் இருக்கிறதா..? அப்போ காடுபோல வளர்வதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!
முகம் சுருக்கம் போவதற்கு என்ன செய்வது:
பாதாமை பவுடர் ஆக்குதல்:
பாதாமில் வைட்டமின் E, கால்சியம் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இது மற்ற உலர் உணவு பொருட்களை விட அதிக சத்துக்கள் வாய்ந்ததாகவும் மற்றும் முகத்திற்கு நல்ல பலனை அளிக்க கூடியதாகவும் உள்ளது.அதனால் முதலில் 10 பாதாமை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்துவைத்துள்ள பாதாமை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஆலோவேரா ஜெல் தயாரித்தல்:
வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் யூரிக் அமிலம் போன்ற சத்துக்கள் கற்றாழையில் உள்ளது. இத்தனை சத்துக்கள் நிறைந்த கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து முகத்தை இளமையாக வைக்கிறது.அதனால் முதலில் கற்றாழை ஒரு சிறிய துண்டு எடுத்துக்கொண்டு அதனை சுத்தமான தண்ணீரில் அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த கற்றாழையில் இருந்து 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.
ஃபேஸ் பேக் தயாரித்தல்:
இப்போது ஒரு பவுலில் 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் பவுடர் 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளுங்கள் . அதன் பிறகு இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக 10 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் முக சுருக்கத்தை போக்குவதற்கு Face Pack தயாராகிவிட்டது.
அப்ளை செய்தல்:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் நன்றாக அப்ளை செய்து விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து முகத்தை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள். இதை மட்டும் ஒரு முறை செய்து பாருங்கள் முகம் இளமையாக இருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஒரே நாளில் நரைமுடி கருமையாக இந்த இரண்டு பொருள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |