10 ரூபாயில் வெள்ளை முடி எல்லாம் கருமையாக மாற்றிடலாம்..! How to Turn White Hair Into Black Hair Naturally in Tamil
உங்களுக்கு நரை முடி பிரச்சனை இருக்கிறதா..? அதனால் தினமும் கவலைப்படுறீங்களா? இனி கவலைப்பட வேண்டாம். இன்றைய பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானதுதான். ஆம் நண்பர்களே நரை முடியை கருமையாக மாற்ற ஒரு அருமையான டிப்ஸை. வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்து ஹேர் டை தயாரிக்கலாம். இதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை ஹேர் டை வாங்க நாம் காசு செலவு செய்ய வேண்டிய எந்த ஒரு அவசியமும் இருக்காது. மேலும் இயற்கையான முறையை ஹேர் டையை பயன்படுத்தினால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. சரி வாங்க இயற்கையான முறையை ஹேர் டை தயார் செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
ஹேர் டை தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- முட்டை – ஒன்று
- கற்றாழை ஜெல் – மூன்று ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – இரண்டு ஸ்பூன்
- வைட்டமின் E மாத்திரை – ஒன்று
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
வெறும் 2 வாரம் பொடுகு தொல்லை, முடி கொட்டுவது, நரை முடி அனைத்திற்கும் ஒரே தீர்வு இது தாங்க..!
ஹேர் டை செய்முறை – How to Turn White Hair Into Black Hair Naturally in Tamil:
ஸ்டேப்: 1
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் கற்றாழை ஜெல் மூன்று ஸ்பூன். (குறிப்பு: கற்றாழை ஜெல்லை கடையில் வாங்க வேண்டாம் இயற்கையான முறையில் வளர்ந்த கற்றாழையை 1/2 மடலை எடுத்து தோலை நீக்கிவிட்டு காய் சீவும் பலகையால் சீவி கொள்ளுங்கள்.)
ஸ்டேப்: 2
பிறகு அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவை உடைத்து ஊற்றவும்.
ஸ்டேப்: 3
பின் அதனுடன் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் மற்றும் ஒரு வைட்டமின் E மாத்திரை ஒன்று ஆகியவற்றை செய்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
அவ்வளவு தான் ஹேர் டை தயார், இதனை தலையில் அப்ளை செய்து 20 நிமிடம் காத்திருக்கவும். 20 நிமிடம் கழித்து தலையை அலசவும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வர நரைமுடி கூடிய விரைவில் கருமையாக மாற ஆரம்பிக்கும்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ஒரே வாரத்தில் நரை முடி கருப்பாகவும் அதிசயம்..! இந்த எண்ணெய் மட்டும் தடவி பாருங்கள்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |