ஓமவல்லி இலை நரை முடியை கருமையாக்குமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

ஓமவல்லி இலை நரை முடியை கருமையாக்குமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..! Karpooravalli Hair Dye..!

இப்போ இருக்கும் சிறியவர்களுக்கும்  சரி, பெரியவர்களுக்கும் சரி நரை முடி பிரச்சனை என்பது இருக்கிறது. இந்த நரை முடி பிரச்சனை எதனால் வருகிறது என்றால் அதற்கு பல காரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நாம் தான் நமது உடல் நலத்தை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் பலர் அழகு சார்ந்த எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு கடைகளில் விற்கப்படும் செயற்கை பொருட்களை தான் தேர்வு செய்கின்றன. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை யாரும் தேர்வு செய்வதில்லை. உடல்நலம் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, அழகு சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி அந்த பிரச்சனைக்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவதுதான் மிகவும் சிறந்தது. ஆக உங்களுக்கு இருக்கும் நரை முடி பிரச்சனைக்கும், இயற்கை பொருட்களை மட்டுமே தேர்வு செய்யுங்கள் இதன் மூலம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது, அதேபோல் உங்கள் தலை முடிக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது. சரி வாங்க நரை முடி பிரச்சனை சரியாக ஓமவல்லி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • ஓமவல்லி இலை – 15
  • வைட்டமின் இ மாத்திரை – ஒன்று
  • கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி கொட்டுவதை நிறுத்தி முடி 3 மடங்கு நீளமாக வளர இது மட்டும் போதும்..!

செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் உங்கள் தலை முடியின் நீளம் மற்றும் அடர்த்தி தன்மையை பொறுத்து தேவையான அளவு ஓமவல்லி இலையை பறிக்கவும். பின் அதனை சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரிக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த ஓமவல்லி இலையை வடிகட்டி சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

அந்த சாறுடன் ஒரு வைட்டமின் இ மாத்திரையை பிழிந்து சேர்க்கவும்.

ஸ்டேப்: 4 

பின் அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இவ்வாறு மிக்ஸ் செய்த கலவையை 15 நிமிடம் நன்கு ஊறவைக்கவும்.

ஸ்டேப்: 5

15 நிமிடம் கழித்து தலை முடியில் எங்கெல்லாம் நரை முடி உள்ளதோ அங்கெல்லாம் அப்ளை செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 6

பிறகு தலைமுடியின் வேர் பகுதி மற்றும் தலை முடி முழுவதும் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் காத்திருந்து தலை அலச வேண்டும். நீங்கள் தலைக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டும் என்றால் ஹெர்பல் ஷாம்புவை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!

ஸ்டேப்: 7

இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர நரை முடி முழுவதும்  கருமையாக மாறிவிடும். கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
SHARE