கேரளா பெண்கள் முகத்திற்கும், தலை முடிக்கும் இதை தான் பயன்படுத்துகிறார்கள்..!

kerala girls beauty tips in tamil

கேரள பெண்களின் அழகு ரகசியம்

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் இருக்கின்ற ஒரே பிரச்சனை முக அழகு பிரச்சனை மற்றும் தலை முடி உதிர்வு பிரச்சனை தான். இந்த இரண்டு பிரச்சனைக்காக கடையில் விற்கும் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். செயற்கை நிறைந்த பொருட்களை பயன்படுத்தும் போது ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் அதுவே பிரச்சனையை ஏற்படுத்தும். இன்னொன்று கேரளா பெண்கள் முகமும் சரி, முடியும் சரி அழகாக இருக்கும். என்ன தான் பயன்படுத்துவார்கள் என்று யோசிப்பீர்கள். நீங்கள் அப்படி யோசித்தீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடியின் இரகசியம்:

Kerala Hair Growth Tips in Tamil

பெரிய நெல்லிக்காய், வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி பூ, கற்றாழை, துளசி, எலுமிச்சை, கருவேப்பிலை, செம்பருத்தி இலைகள் போன்ற பொருட்களை அரைத்து தலையில் அப்ளை செய்வார்கள். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்துவார்கள்.

வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் அரைத்து தலையில் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு குளிப்பார்கள்.

அரிசி கழுவிய தண்ணீரில் வைட்டமின் ஏ, சி, பி, இ போன்ற சத்துக்கள் உள்ளது. அதனால் முதல் நாள் இரவே அரிசியை ஊற வைத்து மறுநாள் ஊற வைத்த தண்ணீரை தலையில் ஊற்றி அலசுவார்களாம். இப்படி செய்வதால் முடி உதிர்வு பிரச்சனை இல்லாமல் முடி நீளமாக வளரும்.

இதையும் படியுங்கள் ⇒  கற்றாழை போதும் நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்யுங்க..!

முக பராமரிப்பு:

தேங்காய் எண்ணெய்:

கேரள பெண்களின் அழகின் ரகசியம்

தினமும் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடுவார்கள்.

கஸ்தூரி மஞ்சள் தூள்:

கஸ்தூரி மஞ்சள் தூள்

இவர்கள் கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் முகத்திற்கு தினமும் கஸ்துரி மஞ்சள் தூளை பயன்படுத்துவார்கள்.

கற்றாழை ஜெல்:

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடுவார்கள். இப்படி செய்வதினால் முகம் புத்துணர்ச்சி ஆகின்றது. மேலும் முகம் பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

சிவப்பு சந்தனம்:

சிவப்பு சந்தனம்

ஒரு பவுலில் சிவப்பு சந்தனம், ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இந்த பேக்கை தினமும் அப்ளை செய்து 10 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி விடலாம். இப்படி செய்வதினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

இந்த பதிவிலுருந்து என்ன தெரிகிறது கேரளா பெண்கள் செயற்கை பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் முகத்தையும், தலை முடியையும் பராமரிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள் ⇒  கேரளா பெண்கள் அழகின் இரகசியம் தேங்காய் எண்ணெய் என்று தெரியும்..! ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது..?

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil