சிவப்பான உதடு பெற இதை செய்தால் மட்டும் போதும்

lips red colour tips in tamil

சிவப்பான உதடு

வணக்கம் நண்பர்களே.! உதடுகள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சிவப்பான உதடு பெறுவதற்காக கடைகளில் விற்கும் கிரீம்களை பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்தும் உதடுகளில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிவப்பான உதடுகளை பெறுவதற்கு இயற்கையான முறையில் உதடுகளை சிவப்பாக்கலாம். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

சிவப்பு உதடுகளை பெற:

எலுமிச்சை பழம்:

முதலில் எலுமிச்சை பழம் இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள். பின் சிறிய தட்டில் சீனி சீனியை தொட்டு கொள்ளுங்கள். சீனி வைத்துள்ள எலுமிச்சை பழத்தை உதட்டில் வைத்து மசாஜ் செய்யுங்கள். உதட்டில் மசாஜ் செய்யும் பொழுது ரொம்ப பொறுமையாக தேய்க்க வேண்டும். இந்த பேக்கை தினமும் இரு முறை செய்யலாம். இல்லையென்றால் இரண்டு மூன்று தடவை கூட செய்யலாம். விரைவில் உதட்டின் கருமை நிறம் மாறி சிவப்பு நிறத்தில் மாறிவிடும். 

இதையும் படியுங்கள் ⇒ உதடு மற்றும் பற்களுக்கான அழகு குறிப்புகள் !!!

தேங்காய் எண்ணெய்:

ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை உதட்டில் கையால் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

பீட்ரூட்:

பீட்ரூட்டை நறுக்கி அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன்பு பீட்ரூட் சாற்றை உதட்டில் அப்ளை செய்து கொள்ளுங்கள். தினமும் இந்த பேக்கை பயன்படுத்துங்கள் விரைவில் உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவப்பு நிறமாக மாறிவிடும்.

மாதுளை பழம்:

மாதுளை பழத்தை உரித்து அதில் உள்ள விதைகளிலுருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். மாதுளை பழம் சாற்றை இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் அப்ளை செய்யுங்கள். விரைவில் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

சீனி மற்றும் நெய்:

ஒரு கிண்ணத்தில் சீனி 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த பேக்கை தினமும் ஒரு தடவை அப்ளை செய்யுங்கள் விரைவில் உதடு சிவப்பு நிறமாக மாறிவிடும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். விரைவில் உதடு சிவப்பு நிறமாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ உதடு மற்றும் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க குறிப்புகள் !!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil