Pudina Face Pack in Tamil
ஒரு சிலருக்கு முகத்தில் எவ்வளவு மேக்கப் போட்டாலும் கொஞ்ச நேரத்திலே கலைந்துவிடும். முகத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து பராமரிப்புகளையும் செய்தாலும் ஏதோ மிஸ் ஆன மாதிரியே இருக்கும். அது மாதிரியான குறைகளை தீர்ப்பதற்கு முதலிடத்தை பெற்றுள்ளது புதினா ஃபேஸ் பேக். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், பருக்கள், சரும வறட்சி போன்ற அனைத்து பிரச்சனைக்கும் புதினா நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. புதினா இலையோடு எந்தெந்த பொருள்களை சேர்த்து ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..
சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் ஃபேஸ் பேக் |
முகம் வெள்ளையாக (skin whitening tips in tamil):
- வெள்ளரிக்காய் – 1/2 (சிறியதாக நறுக்கியது)
- புதினா இலைகள் – 1 கைப்பிடி அளவு
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
முதலில் புதினா இலைகளை நன்றாக கழுவிவிட்டு அதோடு நறுக்கி வைத்துள்ள அரை வெள்ளரிக்காயை சேர்த்துவிட்டு அதன் பிறகு 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்துவிட்டு நன்றாக பேஸ்ட் போன்று மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்த பேஸ்டை தனியாக ஒரு பவுலில் மாற்றி 5 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும். அதன் பிறகு முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் ஃபேஸ் பேக் போட வேண்டும்.
ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிவிடலாம். வாரத்திற்கு இந்த டிப்ஸை செய்து வந்தால் முகம் நன்றாக பொலிவு கொடுக்கும்.
Glowing Skin Face Pack Tips in Tamil:
- வாழைப்பழம்
- புதினா – 1 கைப்பிடி அளவு
செய்முறை விளக்கம்:
வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக மசித்துவிட்டு அதோடு ஒரு கைப்பிடி அளவு புதினாவை சேர்த்து மிக்ஸியில் நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள பேஸ்டினை தனியாக ஒரு பவுலில் மாற்றிக்கொண்டு முகம் மற்றும் கழுத்துகளில் தடவவும்.
சருமத்தில் தடவி 30 நிமிடம் காத்திருக்கவும். அதன் பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்துவர முகத்தில் பருக்கள், சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய முக கருமை, கரும்புள்ளிகள் நீங்கி சருமத்திற்கென ஒரு தனி பொலிவை கொடுக்கும்.
பீட்ரூட் Face Pack – இவ்வளவு அழகு தருமா ? |
பருக்கள் மறைய:
- புதினா இலைகள் – தேவையான அளவு
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- லெமன் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
மிக்ஸி ஜாரில் தேவையான அளவிற்கு சுத்தம் செய்த புதினா இலைகளை சேர்த்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜுஸை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்த பேஸ்டை தனியாக ஒரு பவுலில் வைத்து முகம் மற்றும் கருமையான கழுத்து பகுதிகளில் ஃபேஸ் பேக் போட வேண்டும். ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த முறையை செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தில் இருக்கக்கூடிய பருக்களை அகற்றிவிட்டு முகத்தை இளமையாக வைத்திருக்கும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |