வெளியில் செல்வதற்கு முன் 1 நிமிடம் இந்த Facial செய்வதால் உங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும்

Advertisement

முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும்

ஹாய் நண்பர்களே..! அனைவரும் வீட்டில் இருப்பதை விட வெளியில் செல்லும் போது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். அதற்காக சிலர் பார்லருக்கு சென்று Facial செய்வார்கள். இனி நீங்கள் 1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து 1 நிமிடத்தில் Facial செய்து முகத்திற்கு அழகு சேர்க்கலாம். வாருங்கள் நண்பர்களே 1 நிமிடத்தில் Facial செய்வது எப்படி என்று தொடரை தொடர்ந்து படித்து தெரிந்து கொண்டு நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை செய்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ என்றென்றும் முகம் இளமையாக அப்படியே இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்…!

Mugam Palapalakka Facial in Tamil:

உங்கள் முகம் பளபளக்க வைப்பதற்கு Facial எப்படி செய்வது என்று கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய முகத்தை கழுவி கொள்ளுங்கள். அதன் பிறகு 2 ஸ்பூன் காய்ச்சிய பாலை எடுத்துக்கொண்டு அதில் ஒரு காட்டன் துணியை வைத்து நனைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது நீங்கள் பாலில் நனைத்த அந்த துணியை உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்வது போல அப்ளை செய்து அதன் பிறகு 5 நிமிடம் களித்து முகத்தை கழுவி விடுங்கள்.

ஸ்டெப்- 3

அதன் பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள் அதில் சர்க்கரை- 1/2 ஸ்பூன், தேன்- 1/2 ஸ்பூன் இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல கலந்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது கலந்த வைத்த பேஸ்டை உங்களுடைய புருவம் மற்றும் கண்களில் மட்டும் படாதவாறு முகத்தில் மற்ற இடங்களில் மசாஜ் செய்து 5 நிமிடம் களித்து முகத்தை கழுவி விடுங்கள்.

ஸ்டேப்- 5

அடுத்ததாக ஒரு 10 நிமிடம் களித்து 1 சிறிய துண்டு தோல் நீக்கிய வாழைப்பழம் மற்றும் காய்ச்சிய பால் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக உங்களுடைய கைகளால் பிசைந்து விடுங்கள்.

ஸ்டேப்- 6

அதன் பிறகு நீங்கள் பிசைந்த அந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் களித்து முகத்தை கழுவி விடுங்கள். இப்போது உங்கள் முகத்தை பார்த்தால் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.

இந்த Facial செய்து பிறகு நீங்கள் வெளியில் சென்றால் உங்கள் முகம் மேக்கப் போட்டது போல் அழகாக இருக்கும்.

அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரிப்படுவீர்கள்…!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement