முகத்தில் உள்ள முடி உதிர
பெண்களுக்கு முடிகள் இல்லாமல் மிருதுவாக இருந்தால் அழகாக இருக்கும். தேவையில்லாத முடிகளை நீக்குவதற்கு Beauty Parlour சென்று நீக்கினாலும் கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் அந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும். முகத்தில் முடி வளரவதற்கு முக்கிய காரணமே ஹார்மோன்கள். அதாவது பெண்களின் உடலில் Testosterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுராக்கும் போது முகத்தில் தேவையற்ற முடி வளர்ச்சி உருவாகிறது. சிலருக்கு மரபணுவாலும் இந்த முடி வளர்ச்சி இருக்கும். இந்த பிரச்சனையை வீட்டிலிருந்தே எப்படி போக்குவது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் மரு வந்து அழகை கெடுக்கிறதா..! இனி இந்த மாதிரி செய்யுங்க..!
மீசை முடி உதிர:
மஞ்சள் தூள் அல்லது பச்சை மஞ்சள் எடுத்து கொள்ளுங்கள். பின் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக குழைத்து கொள்ளவும். பின் தேவையில்லாத முடிகள் எங்கு இருக்கிறதோ அங்கு அப்பளை செய்யுங்கள். பின் காய்ந்தவுடன் துணியை வெண்ணீரில் நனைத்து முகத்தை துடையுங்கள். தொடர்ந்து வாரத்தில் 2 முறை செய்து வந்தால் முடி நீங்கி விடும்.
கடலை மாவு ஃபேஸ் பேக்:
முகத்திற்கு அதிகமாக பயன்படுத்த கூடியதில் நல்ல பலனை கொடுப்பது கடலை மாவு. கடலை மாவை ஒரு பேஸ்ட்டாக குழைத்து கொள்ளவும். பின் முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளில் மீது தடவுங்கள். சிறிது வைத்திருந்து முகத்தை கழுவி விடுங்கள்.
தேன்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி தேனை சேர்க்க வேண்டும். இந்த கலவையை 2 நிமிடம் வரை சூடு படுத்தவும். பின் தேவையில்லாத முடிகளில் மீது தடவுங்கள். தொடர்ந்து வாரத்தில் 2 தடவை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு:
ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பின் இந்த சாற்றை தேவையில்லாத முடிகளின் மீது தடவுங்கள். பின் 10 நிமிடம் கழித்து குளிரிந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள்.
பப்பாளி முகத்திற்கு:
பப்பாளியை தேவையான அளவு எடுத்து அதனின் தோலை சீவி நன்றாக பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பின் அரைத்து வைத்த பப்பாளியில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். பின் இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளின் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |