30 நிமிடத்தில் நரைமுடி கருமையாக கொய்யா இலை ஹேர் டை செய்முறை

Advertisement

 நரைமுடி கருமையாக கொய்யா இலை ஹேர் டை | Natural Black Hair Dye Home Remedies in Tamil

40 வயது மேற்பட்டவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி, மீசை மற்றும் தாடி ஆகியவை நரைத்து வெள்ளையாக மாறுவது என்பது இயல்பான விஷயம் தான். ஆனால் சமீப காலமாக டீனேஜ் வயதில் உள்ள ஆண், பெண் இருவருக்குமே நரைமுடி பிரச்சனை வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். சிறுவயதில் நரைமுடி வருவது மிக முக்கிய காரணம் வைட்டமின் பி12 குறைபாடு ஆகும். ஆக சிறுவயதில் உள்ளவர்கள் கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஹேர் டையை பயன்படுத்துவதற்கு பதில் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உங்கள் உணவு முறையில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்றால், இயற்கையாக ஹேர் டை தயார் செய்து பயன்படுத்தலாம். உங்களுக்கு இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்ய தெரியாது என்றால், இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். ஆம் நண்பர்களே இங்கு நாம் இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பு முறை மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகளை பற்றி பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  1. கொய்யாய் இலை – 10
  2. டீத்தூள் – 1 1/2 ஸ்பூன்
  3. செம்பருத்தி பொடி – 1 1/2 ஸ்பூன் (காய்ந்த செம்பருத்தி இலையையும் பயன்படுத்தலாம்)
  4. நீலநிறம் சங்குப்பூ – 10
  5. மருதாணி இலை – இரண்டு கையளவு (பொடியாக இருந்தால் 3 ஸ்பூன்)
  6. எலுமிச்சை சாறு – சிறிதளவு
  7. அவுரி பொடி – 3 ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே மாதத்தில் நரைமுடி நிரந்தரமாக கருமையாக.. இதை மட்டும் தலையில் அப்ளை பண்ணுங்க போதும்

ஹேர் டை செய்முறை | Natural Black Hair Dye Home Remedies in Tamil:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் கொய்யா இலை மற்றும் டீத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் செம்பருத்தி பொடி மற்றும் சங்குப்பூ சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அவற்றில் உள்ள எசன்ஸ் அனைத்தும் தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை Off செய்து ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளுங்கள்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு கையளவு மருதாணி சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் தண்ணீர் சேர்க்காமல் வடிகட்டி வைத்துள்ள டிகாஷனை அதிலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மருதாணியை நன்கு நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் இரும்பு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் அரைத்த மருதாணியை சேர்க்கவும், அதனுடன் 5 சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் வடிகட்டி வைத்துள்ள டிகாஷன் கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.

பிறகு அதனை பிளேட் போட்டு மூடி ஒருநாள் முழுவதும் அப்படியே ஊறவைக்கவும். மறுநாள் அதனை எடுத்து பார்த்தால் நன்கு கருமையாக மாறியிருக்கும்.

இதனை தலைக்கு அப்ளை செய்வதற்கு 15 நிமிடத்திற்கு முன் மூன்று ஸ்பூன் அவுரி பொடி சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள். கலவை ரொம்ப கெட்டியாக இருந்தால் அந்த டிகாஷனை ஊற்றி 15 நிமிடம் நன்றாக ஊறவைக்கவும்.

பிறகு தலைக்கு அப்ளை செய்யலாம், இதனை தலையில் அப்ளை செய்த பிறகு 1 மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு தலைக்கு ஷாம்பு போடாமல் நன்கு தேய்த்து குளிக்கவும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் என்று ஒரு மாதம் அப்ளை செய்து வந்தால் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement