2 ஸ்பூன் போதும் நரைமுடி கருமையாகிவிடும் 100% ஹெர்பல் ஹேர் டை..!

Advertisement

நரைமுடி கருமையாக ஹெர்பல் ஹேர் டை செய்முறை | Natural Hair Dye in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இந்து நாம் ஹெர்பல் ஹேர் டை தயார் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் நிறைய டிப்ஸினை பின்பற்றி அவற்றில் என்ன ஒரு பலனும் கிடைக்கவில்லையா. அப்படி என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள். ஆம் இங்கு வெள்ளை முடி கருமையாக மாற ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க உள்ளோம். அந்த டிப்ஸை நீங்கள் ஒரு முறை ட்ரை செய்வதன் மூலம் கண்டிப்பாக 100% ரிசல்ட்டை பெறமுடியும். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று பார்ப்போம்.

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:

  • மருதாணி பவுடர் – ஒரு ஸ்பூன்
  • அவுரி பவுடர் – ஒரு ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • தண்ணீர் – தேவையான அளவு

ஹேர் டை செய்முறை – Natural Hair Dye in Tamil:

இரவு உறங்க செல்வதற்கு முன் ஒரு பவுலை எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அவற்றில் ஒரு பவுலில் மருதாணி பவுடர் ஒரு ஸ்பூன் மற்றும் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் தண்ணீர் செய்து நன்றாக பேஸ்ட்டு போல் மிக்ஸ் செய்ய வேண்டும். பிறகு இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். அதாவது 12 மணி நேரம் ஊறினால் போதும் அவற்றில் நிறம் மாறி இருக்கும்.

பிறகு தலையில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும் மருதாணி தலையில் நன்கு காய்ந்ததும் தலையை நன்றாக அலசிவிடுங்கள். குறிப்பாக இதனை தலையில் அப்ளை செய்யும் போது தலையில் எண்ணெய் தடவி இருக்க கூடாது ஆக முதல் நாளே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்துவிடுங்கள்.

பின்பு இன்னொரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் அவுரி பொடி ஒரு ஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் 4 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். பிறகு மூடிபோட்டு 2 மணி நேரம் வரை காத்திருக்கவும்.

பின் இதனை தலையில் அப்ளை செய்ய வேண்டும் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து தலை அலசலாம். இல்லை அன்றே இரண்டு முறை தலை குளிக்க முடியாது என்கின்ற போது அடுத்தநாள் இந்த பேக்கை தயார் செய்து தலையில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து தலை குளிக்கலாம். ஆனால் தலைக்கு ஷாம்பு போடக்கூடாது தலைக்கு ஷாம்பு போடலாம் அப்படியே தலை அலச வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்தாலே போதும் ஒரு மாதத்திலேயே வெள்ளை முடி கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தலையில் எப்போதும் நரை முடி வராமல் முடி கருகருவென்று இருக்க இதை பாருங்கள்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement