6 பொருள் போதும் ஒரே வாரத்தில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! இயற்கை ஹேர் டை..!

Natural Home Made Black Hair Dye Tamil

இயறக்கை ஹேர் டை செய்முறை.. Natural Home Made Black Hair Dye Tamil

நரை முடி உங்களுக்கு நிறைய இருக்கா..? ஆனால் கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படுத்த விருப்பம் இல்லையா? அப்படியென்றால் இந்த பதிவு உணங்களுக்கு தான்.. ஆம் வாசகர்களே இந்த பதிவில் இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்து தலைமுடிக்கு பயன்படுத்துவதை பற்றி தான் பார்க்க உள்ளோம். இதனை பயன்படுத்துவதினால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தை உணர முடியும். சரி வாங்க அந்த ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்த்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

  1. மருதாணி பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  2. அவுரி பொடி – மூன்று டேபிள் ஸ்பூன்
  3. நெல்லிக்காய் தூள் – இரண்டு ஸ்பூன்
  4. கரிசிலாங்கண்ணி பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு – அரை எலுமிச்சை அளவு
  6. தேங்காய் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  7. தண்ணீர் – தேவையான அளவு

இயற்கை ஹர் டை செய்முறை:

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மருதாணி பவுடர் இரண்டு டேபிள் ஸ்பூன், அவுரி பொடி மூன்று டேபிள் ஸ்பூன், நெல்லிக்காய் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் மற்றும் தண்ணீர் குழைப்பதற்கு தேவையான அளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையை தலையில் நன்றாக அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும் பிறகு தலை அலசவும்.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தாலே போதும் நரை முடி கருமையாக மாறிவிடும்.

பயன்கள்:

இந்த ஹேர் டை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது. தலைமுடி கருமையாக மாறும், தலை முடி உதிர்வு பிரச்சனை சரியாகும், தலை முடி அடத்தியாக வளரும்.

இருப்பினும் ஆஸ்துமா, அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் பிரச்சனை இருக்கும் நபர்கள் இந்த ஹேர் டையை பயன்படுத்த வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
முன் நெற்றியில் மட்டும் வெள்ளை முடி உள்ளதா? கவலைப்படாதீங்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil