சருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்..! Olive Oil For Skin..!

Advertisement

ஆலிவ் ஆயில் அழகு குறிப்பு..! Olive Oil For Skin Benefits..!

Olive Oil Uses In Tamil: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆலிவ் ஆயிலின் 5 பயன்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். ஆலிவ் ஆயில் நிறைய நாடுகளிலிருந்து நமக்கு கிடைக்கின்றது. சரும அழகை பாதுகாக்க குக்கிங் ஆலிவ் ஆயிலை தவிர்ப்பது நல்லது. சருமத்திற்கு ஏற்ற ஆலிவ் ஆயிலை வாங்கி பயன்படுத்த வேண்டும். சரி இப்போது ஆலிவ் ஆயில் பயன்படுத்தி 5 வித சருமத்தின் அழகை பற்றி படித்து தெரிந்துகொள்ளுவோம்..!

newஆலிவ் ஆயில் அழகு குறிப்புகள்..! Olive oil for face in tamil..!

வறண்ட உதட்டை குணப்படுத்தும் ஆலிவ் ஆயில்:

olive oil uses in tamilசிலருக்கு எப்போதும் உதடு வறண்ட நிலையிலே இருக்கும். இதற்கு பவுலில் 1/2 ஸ்பூன் சுகர் ஸ்க்ரப் அதனுடன் 2 அல்லது 3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து வறண்ட இடத்தில் தடவி வர வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ச்சியாக செய்யாமல் ஒரு நாள் விட்டு கூட செய்து வரலாம். வறண்ட பகுதி நல்ல மாற்றம் கிடைக்கும்.

தோல் பளபளக்க ஆலிவ் ஆயில்:

olive oil uses in tamilதோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள் 2 அல்லது 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில் 3 அல்லது 4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.

வரி தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில்:

olive oil uses in tamilசிலருக்கு உடலில் வரி தழும்புகள்(stretch marks) இருக்கும். இது போன்ற வரி தழும்பு மறைய பயோ ஆயில்(Bio Oil) மற்றும் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து தடவி வந்தால் கண்டிப்பாக அந்த தழும்பு கோடுகள் மறைந்துவிடும்.

 

newஉச்சி முதல் பாதம் வரை சருமம் வெள்ளையாக இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..!

பாத வெடிப்பு நீங்க ஆலிவ் ஆயில்:

olive oil uses in tamilஅனைவருக்கும் பாதங்களில் வெடிப்பு வருவது இயல்பு. பாத வெடிப்பு நீங்க வாஸ்லின் மற்றும் 2,3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை சேர்த்து வெடிப்பு பகுதியில் மசாஜ் செய்து சாக்ஸ் அணிந்தால் விரைவில் வெடிப்பு நீங்கும்.

முகம் வெள்ளையாக ஆலிவ் ஆயில்:

olive oil uses in tamilபெண்கள் அனைவருக்கும் ஃபேஸ் பேக் போடும் வழக்கம் இருக்கும். இதற்கு கடைகளில் விற்கும் முல்தானிமிட்டி உபயோகிப்பார்கள். முல்தானிமிட்டி சருமத்தை வறண்ட நிலையில் ஏற்படுத்திவிடும். அதனால் முல்தானிமிட்டியுடன் 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து முகத்தில் தடவி வர முகம் விரைவில் பளிச்சென்று இருக்கும். இந்த டிப்ஸ் சரும பிரச்சனை உள்ள அனைவரும் பயன்படுத்தலாம்.

newமுகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..! Aloe Vera Face Pack in Tamil
இயற்கை அழகு குறிப்புகள் (Aloe Vera Face Pack in amil) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement