முடி உதிர்வதை தடுக்க இயற்கை வழிகள் | Mudi Valara Iyarkai Maruthuvam
Mudi Valara Enna Seivathu: தற்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு தான். முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கும், உதிர்ந்த இடத்தில் முடி உதிர்வதற்கும் ஒரு நல்ல மருத்துவம் என்றால் அது பாட்டி வைத்தியம் தான். நாம் இந்த பதிவில் முடி நீளமாக வளர்வதற்கு பாட்டி சொல்லும் வைத்தியத்தை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் பால் – 1 கப்
- கற்றாழை ஜெல் – சிறிதளவு
செய்முறை:
- Paati Vaithiyam For Hair Growth in Tamil: தேங்காய் பால் 1 கப் எடுத்து கொள்ளவும். பின் கற்றாழை ஜெல் தேவையான அளவு எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின் அரைத்து வைத்த கற்றாழை ஜெல்லையும், தேங்காய்ப்பாலையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி தலையில் தடவி கொள்ளவும்.
- தலையில் 15 நிமிடம் ஊறிய பின் தலையை அலசி விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் முடி உதிர்வு சீக்கிரம் குறைந்து முடி வளர ஆரம்பிக்கும்.
தேவையான பொருட்கள்:
- வெந்தயம் – தேவையான அளவு
- செம்பருத்தி பூ – 3 (செம்பருத்தி பூ பொடி 2 டேபிள் ஸ்பூன்)
செய்முறை:
- தலைமுடி அடர்த்தியாக வளர: ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் தூங்க செல்வதற்கு முன் ஊறவைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து கொள்ளவும்.
- பின் செம்பருத்தி பொடி அல்லது புதிதாக பறித்த செம்பருத்தி பூவை அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூவை ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணவும். இதை தலையில் தடவி 20 மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்கவும். இதன் மூலம் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
தேவையான பொருட்கள்:
- மருதாணி இலை – தேவையான அளவு
- ஆட்டுப்பால் – 1 கப்
- வெட்டி வேர் – அரை டேபிள் ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி – தேவையான அளவு
செய்முறை:
- Paati Vaithiyam For Hair Growth in Tamil: முதலில் ஆட்டுப்பால் 1 கப் எடுத்து சூடாக்கி அதை ஆறவைத்து எடுத்து கொள்ளவும்.
- பின் மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி தேவையான அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.
- ஆட்டுப்பால் ஆறிய பின் அதில் அரைத்து வைத்த மருதாணி இலை 1 டேபிள் ஸ்பூன், கரிசலாங்கண்ணி இலை 2 டேபிள் ஸ்பூன், வெட்டி வேர் பொடி அரை டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- பின் இதை தலையின் வேரில் படும் அளவிற்கு தேய்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். வாரத்திற்கு ஒருமுறை இதை நீங்கள் பயன்படுத்தி வந்தால் வழுக்கை, சொட்டை, முடி உதிர்வு நீங்கி முடி அடர்த்தியாக வளரும். உடல் சூட்டை தணிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
Paati Vaithiyam For Hair Growth in Tamil:
- தலை முடி உதிராமல் இருப்பதற்கு சத்தான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
- அழுக்காக இருக்கும் சீப்பை பயன்படுத்த கூடாது. தலைக்கு குளித்தவுடன் சீப்பை சுத்தம் செய்து விட்டு பின்னர் பயன்படுத்தவும்.