கருந்திட்டுக்கள் மறைய
முகத்தில் இருக்கும் பிரச்சனையில் பரு, மரு போலவே இந்த கருந்திட்டுக்களும் இருக்கும். இந்த கருந்திட்டுகள் முகத்தில் இருந்தால் முகத்தின் அழகை அசிங்கமாக்கும். இதற்காக கடையில் விற்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் நீக்குவது ஈஸியானது அல்ல. நீங்கள் இதற்கு பணம் செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி நீக்குவது என்று தெரிந்துகொள்வோம். இந்த பதிவில் உள்ள குறிப்பை பயன்படுத்தி ஒரே வாரத்தில் பிக்மென்ட்டேஷனை சரி செய்து விடலாம், சரி வாங்க பதிவிற்குள் செல்லுவோம்.
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் மரு வந்து அழகை கெடுக்கிறதா..! இனி இந்த மாதிரி செய்யுங்க..!
Pigmentation Treatment in Tamil:
டிப்ஸ்:1
முதலில் குங்கிலியம் 20 கிராம், நல்லெண்ணெய் 100ml எடுத்து கொள்ளுங்கள். குங்கிலியத்தை இடித்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் 100ml நல்லெண்ணெய் ஊற்றவும். பின் இடித்த குங்கிலியத்தை எண்ணெயில் சேருங்கள். குங்கிலியம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பிறகு எண்ணெய் ஆறியதும் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் 100ml தண்ணீர் ஊற்றவும். பிறகு இந்த தண்ணீரில் வடிகட்டியி வைது இருக்கும் எண்ணையை சேருங்கள். பின் இரண்டு பொருட்களும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இப்போ ஒரு கிரீம் போல கிடைத்துவிடும். இந்த கிரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.
அப்ளை செய்யும் முறை:
இந்த கிரீமை இரவு தூங்குவதற்கு முன்பு பிக்மென்டேஷன் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.
டிப்ஸ்:2
ஒரு கிண்ணத்தில் எலும்பிச்சை பழச்சாறு, பசும் பால் சேர்த்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸ் செய்யுங்கள்.
பிறகு உங்களது முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின் முகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பின் கலந்து வைத்த கலவையை முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருங்கள். பிறகு முகத்தை கழுவி விடுங்கள்.
டிப்ஸ்:3
அடுத்து பொடுதலை கீரையை கழுவி அரைத்து கொள்ளுங்கள். எலும்பிச்சை 1 தேக்கரண்டி பழச்சாறு எடுத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பின் கலந்து வைத்த பேஸ்ட்டை முகத்தில் பிக்மென்டேஷன் எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை பயன்படுத்தினால் போதுமானது. இந்த குறிப்பை ஒரு வாரம் தொடர்ந்து அப்ளை செய்யுங்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |