1 ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் வெள்ளை முடியை கருமையாக்கும் பூண்டு தோல் ஹேர் டை..!

Poondu Thol Pair Dye in Tamil

ஒரு ரூபாய் செலவில்லாமல் நரைமுடியை கருமையாக்கும் பூண்டு தோல் ஹேர் டை..!

Poondu Thol Pair Dye in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய காலகட்டத்தில் சிறிய வயதிலேயே நரை முறை பிரச்சனை வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் மெலனின் குறைபாடே முக்கிய காரணம் ஆகும். ஆகவே சத்துள்ள உணவுகளை சிறு வயதில் இருந்து உண்டு வந்தாலே இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்காக கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் வீட்டிலேனுக்கே ஹேர் டை தயார் செய்து பயன்டுத்துங்கள். இதற்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டும். சரி வாங்க அந்த ஹேர் டை எப்படி தயாரிக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பூண்டு தூள் – இரண்டு கைப்பிடி அளவு
  • தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
  • இரும்பு கடாய் – ஒன்று

பூண்டு தோல் ஹேர் டை  (Poondu Thol Pair Dye in Tamil) செய்முறை:

இரும்பு கடாயில் பூண்டு தோலை சேர்த்து நன்றாக கருகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு கருகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிடுங்கள்.

நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு சல்லடையை பயன்படுத்தி நன்றாக சலித்துக்கொள்ளுங்கள். பிறகு காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!

பயன்படுத்தும் முறை:

ஒரு சுத்தமான பவுலில் உங்கள் தலை முடிக்கு தேவையான அளவு அரைத்த பூண்டு தோலின் பவுடரை சேர்த்து அதில், மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.

பிறகு நன்கு பேஸ்டு போல் கலந்து கொள்ளுங்கள்.

பின் தலை முடியில் மற்றும் நரை முடி உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும் பிறகு தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தி நன்றாக அலசிவிடுங்கள்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை மட்டும் இந்த முறையை செய்து வந்தாலே போதும் 15 நாட்களிலேயே உங்கள் வெள்ளை முடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்.

ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 இளம் வயதிலேயே ஏன் வெள்ளை முடி வருகிறது தெரியுமா? முக்கிய காரணமே இதுதான்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami