Remove Black Spots On Face in Tamil
வணக்கம் நேயர்களே..! இன்றைய அழகுக் குறிப்பு பதிவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆண் பெண் இருவருக்குமே அழகான முகம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் வராமல் தடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்து வருகின்றோம். அந்த முயற்சிகள் யாவும் உங்களுக்கு பலனளிக்காமல் போகிறதா..? அப்போ இதை கற்றாழையை முகத்திற்கு இப்படி தடவி பாருங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Katralai Beauty Tips in Tamil:
டிப்ஸ் – 1
முதலில் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் வெள்ளை சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி கொள்ள வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இதுபோல செய்து வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று கவலைப்படாதீர்கள்.! இந்த டிப்ஸை மட்டும் Follow பண்ணா முகம் பிரகாசிக்கும் |
டிப்ஸ் – 2
அதுபோல கற்றாழையின் உள்ளே இருக்கும் அந்த ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் அரிசிமாவை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு மைபோல அரைத்து கொள்ள வேண்டும். பின் இதை நீங்கள் உங்கள் முகத்திற்கு பேஸ் பேக் போல தடவி கொள்ளலாம்.
பின் 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். அதுபோல முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும். முகம் பொலிவுடன் இருக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க தீர்வு
டிப்ஸ் – 3
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
இப்படி செய்து வருவதால் உங்கள் முகத்தில் இருக்கும் கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையம் போன்றவை நீங்கி விடும். அதுபோல முகத்தில் வறட்சி நீங்கி பருக்கள் வராமல் தடுக்கிறது.
இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |