முகம் வெள்ளையாக இயற்கை வழிகள் | 7 Days Challenge For Glowing Skin in Tamil
முகம் வெள்ளையாகுவதற்காக கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாதீர்கள். பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட்டை தந்தாலும் நாளடைவில் முகத்தில் பருக்கள், அரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கை முறையில் முகத்தை வெள்ளையாக்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
Rice For Skin Whitening in Tamil:
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி 7 நாட்களில் முகத்தை வெள்ளையாக்குவது எப்படி என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதுவும் அரிசியை வைத்து முகத்தை வெள்ளையாக்கலாம். இந்த பேக்கில் பயன்படுத்தும் அரிசி மற்றும் கற்றாழை முகத்தை வெள்ளையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும், அதேபோல ஈர தன்மையுடனும் வைத்து கொள்ள உதவுகிறது.
ஸ்டேப்:1
முதலில் உங்களுக்கு தேவையான அளவு பச்சரிசி எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
ஸ்டேப்:2
மறுநாள் காலையில் ஊற வைத்த அரிசி மற்றும் ஊற வைத்த தண்ணீர் இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஸ்டேப்:3
அரைத்த அரிசியை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும்.
ஸ்டேப்:4
வடிகட்டிய அரிசி தண்ணீரை ஒரு கொதி கொதிக்க விட்டு ஆற விடவும். ஆறிய அரிசி தண்ணீருடன் கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
இதையும் படியுங்கள் ⇒ காசு கொடுத்து Facial செய்யாமல் இந்த மாதிரி வீட்டிலேயே Facial செய்து பாருங்கள்..!
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் ஒன்று ஞாபகம் வைத்து கொள்ளவும். எந்த பேஷ் பேக் போடுவதற்கு முன் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி ஒரு காட்டன் துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும்.
பிறகு அரிசி பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து முகத்தை கழுவி கொள்ளவும். இந்த பேக்கை தொடர்ந்து 7 நாட்கள் அப்ளை செய்து வரவும். 7 நாட்கள் அப்ளை செய்து வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இது இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ 15 நாள் CHALLENGE முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் வெள்ளையாக இதை ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |