இனி அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி சரும அழகை பாதுகாக்கலாம்..!

அரிசி கழுவிய தண்ணீரின் (rice water) மகிமை:

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருவரும் தங்கள் சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

குறிப்பாக முகத்தில் பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி, கருவளையம் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க, பலவகையான விலை உயர்ந்த கிரீம்ஸ் வாங்கி பயன்படுத்துவார்கள்.

இருப்பினும் அவையெல்லாம் முழுமையான பலன் அளித்துவிடாது.

எனவே செலவு பண்ணாமல் அழகு பெற முடியுமா? என்று கேட்டால் நிச்சயமாக முடியும், அதுவும் நம் வீட்டில் தினமும் வேஸ்ட் பண்ணும் அரிசி கழுவிய தண்ணீரை (rice water) வைத்து சருமத்தின் அழகை மேம்படுத்த முடியும்.

அதுவும் இந்த அரிசி கழுவிய தண்ணீரை தினமும் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது கருவளையம், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் மற்றும் முக பருக்களால் சருமத்தில் ஏற்படும் தழும்புகள் போன்ற பலவகையான பிரச்சனைகளை சரி செய்கிறது இந்த அரிசி கழுவிய தண்ணீர்.

newநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..!

சரி வாங்க இந்த பகுதியில் அரிசி கழுவிய தண்ணீரை (rice water) பயன்படுத்தி சரும அழகை எப்படி பாதுகாக்கலாம் என்று இப்போது நாம் காண்போம்.

தேன் மற்றும் அரிசி கழுவிய தண்ணீர்:

ஒரு பவுலில் சிறிதளவு அரிசி எடுத்து கொள்ளுங்கள், அவற்றை ஒருமுறை தண்ணீர் ஊற்றி அலசி விட்டு, பிறகு 1/2 மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளவும்.

பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி கொள்ளவும், பின்பு அவற்றில் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இப்போது ஐஸ் ட்ரே ஒன்றை எடுத்து கொள்ளவும், இவற்றில் இந்த தண்ணீரை ஊற்றி ஐஸ்கட்டி உறையும் வரை காத்திருந்து, பின்பு அந்த ஐஸ்கட்டியை முகத்தில் மசாஜ் செய்வது போல், நன்றாக மசாஜ் செய்யவும் இவ்வாறு செய்வதினால் சருமத்தில் ஏற்படும் சரும திட்டுகள் சரியாகும்.

அதுமட்டும் இன்றி சருமம் எப்போதும் பொலிவுடன் காணப்படும். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரவும்.

newமுகத்தில் உள்ள முடி நீங்க இயற்கை வழிகள் !!!Face Hair Removal Home Tips Tamil..!

அரிசி மாவு மற்றும் அரிசி கழுவிய தண்ணீர்:

அரிசி கழுவிய தண்ணிரை எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, உறைய வைத்து முகத்தில், இந்த ஐஸ் கட்டியை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளித்து, இழந்த முக பொலிவை மீட்டுத்தருகிறது.

இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

கற்றாழை ஜெல் மற்றும் அரிசி கழுவிய தண்ணீர்:

கற்றாழையை தோல் நீக்கிவிட்டு, மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும், பின்பு அரிசி கழுவிய தண்ணீருடன் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, உறைய வைக்கவும்.

பின்பு இந்த ஐஸ் கட்டியை சருமத்தில் தேய்த்து வர, சருமத்தில் ஏற்படும் வறட்சி, கரும்புள்ளிகள், கரும்திட்டுகள், கரும்புள்ளிகள் மற்றும் பருவினால் ஏற்படும் தழும்புகள் ஆகிய பிரச்சனைகள் சரியாகும்.

இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வரலாம்.

அரிசி மாவில் கூட சரும அழகை அதிகரிக்கலாம்

பயத்தமாவு மற்றும் அரிசி கழுவிய தண்ணீர்:

ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் பயத்தமாவு எடுத்து கொள்ளவும், அவற்றில் அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விடவும். பின்பு இந்த தண்ணீரை ஐஸ் ட்ரேயில் ஊற்றி நன்றாக உறைய வைக்கவும்.

பின்பு இந்த ஐஸ் கட்டியை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து வர, சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.

இந்த முறையை தினமும் செய்து வரலாம்.

இந்த அழகு குறிப்பு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், தங்கள் நண்பர்களுக்கும் பகிர்த்திடுங்கள்.

newஉடல் அழகு பெற தேவையான அழகு குறிப்புகள்..! Alagu Kurippu 1000 in Tamil..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil