வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்களே ஆச்சிரியப்படும் அளவிற்கு அடர்த்தியான முடி வேண்டுமா.! அப்போ இதை செய்யுங்கள்.!

Updated On: October 27, 2022 1:18 PM
Follow Us:
sembaruthi hair pack in tamil
---Advertisement---
Advertisement

அடர்த்தியான முடி வளர

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அடர்த்தியான முடி இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். முடி இருந்தால் தான் அழகு என்று நினைப்பார்கள். முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளருவதற்காக நிறைய குறிப்புகளை பயன்படுத்துவார்கள். நீங்கள் எத்தனை குறிப்புகள் பயன்படுத்தியும் எந்த வித Improvement இல்லை என்று கவலை படாதீர்கள். அதற்கான சிறந்த பதிவாக இருக்கும். இந்த பதிவில் உள்ள குறிப்பை பயன்படுத்தி பாருங்கள் நீங்களே ஆச்சிரியப்படும் அளவிற்கு முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ தலை முடி அடர்த்தியாக வளர எளிய வழிகள்

செம்பருத்தி ஹேர் பேக்செய்ய தேவையான பொருட்கள்:

  1. செம்பருத்தி பூக்கள் –3
  2. கற்றாழை ஜெல் –சிறிதளவு 
  3. பாசி பருப்பு -சிறிதளவு 
  4. கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  5. விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்- 1 தேக்கரண்டி 

ஸ்டேப்:1

முதலில் 3 செம்பருத்தி பூக்களை எடுத்து கொள்ளுங்கள். மேலும் கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களுமே முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. இரவு முழுவதும் ஊறிய பச்சை பயிறு எடுத்து கொள்ளுங்கள். பின் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

பிறகு செம்பருத்தி பூக்கள், கறிவேப்பிலை, கற்றாழை ஜெல், ஊற வைத்த பச்சை பயறு போன்ற பொருட்களை பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

இப்பொழுது அரைத்த விழுதை ஒரு காட்டன் துணியை பயன்படுத்தி சாற்றை மட்டும் பிழிந்து கொள்ளுங்கள். இந்த சாற்றில் ஆலிவ் ஆயில் அல்லது விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி  சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:4

இந்த செம்பருத்தி ஹேர் பேக்கை தலையின் தடவி விட்டு அதன் பிறகு தலை முடி முழுவதும் தடவி கொள்ளுங்கள். அப்படியே தலையில் ஒரு 10 நிமிடம் இருக்கட்டும். 10 நிமிடம் கழித்ததும் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை தேய்த்து கொள்ளலாம்.

ஸ்டேப்:5

இந்த ஹேர் பேக்கை நீங்கள் மாதத்திற்கு 4 முறை பயன்படுத்துங்கள். 2 முறை பயன்படுத்திய பிறகு நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள். இந்த ஹேர் பேக் முடி வளரவும் செய்யும். முடி உதிராமலும் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now