15 நாள் CHALLENGE முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் வெள்ளையாக இதை ட்ரை பண்ணுங்க..!

Skin Whitening Tips in Tamil

பெண்களுக்கு எப்போதும் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் எப்போதும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக எத்தனையோ வகையான கிரீம்களை முகத்திற்கு அப்ளை செய்து இருப்பீர்கள். சிலர் இதற்காக நிறைய பணம் செலவு செய்து இருப்பார்கள். இனி நீங்கள் 1 ரூபாய் கூட செலவு செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 30 நாள் CHALLENGE, குச்சி மாதிரி உள்ள முடியை அடர்த்தியாக வளர வைக்க இதை ட்ரை பண்ணுங்க..!

முகத்தில் உள்ள பருக்கள் நீங்க:

முகத்தில் உள்ள பருக்கள் நீங்க

முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் வெள்ளையாக மாற கிரீம் தயார் செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கிரீம் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • கற்றாழை- சிறிய துண்டு
  • கேரட்- 1
  • கான் பிளவர் மாவு- 2 ஸ்பூன்
  • வைட்டமின் E மாத்திரை – 2

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்:

முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள கற்றாழையை சுத்தமாக தண்ணீரில் அலசி விடுங்கள். அதன் பிறகு கற்றாழையில் இருந்து ஜெல் எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்து எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஒரு காட்டன் துணியில் வைத்து சுத்தமாக வடிகட்டி மற்றொரு கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது கிண்ணத்தில் இருக்கும் கற்றாழை ஜெல்லை உங்கள் வீட்டில் இருக்கும் பிரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். 1/2 மணி நேரம் கழித்து ஜெல்லை வெளியே எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள கேரட்டை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் போல அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

அடுத்ததாக கேரட் ஜூஸ் வைத்து இருக்கும் கிண்ணத்தில் 2 ஸ்பூன் கான் பிளவர் மாவு சேர்த்து கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 6

5 நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்த பிறகு கிண்ணத்தில் கலந்து வைத்துள்ள கேரட் ஜூஸினை அந்த தண்ணீரின் மேல் வைத்து  பேஸ்ட் போல வரும் வரை நன்றாக கிண்டி கொண்டே இருங்கள்.

ஸ்டேப்- 7

இப்போது கேரட் பேஸ்ட் தயாரான பிறகு அடுப்பை அணைத்து விட்டு அந்த பேஸ்ட்டை 10 நிமிடம் ஆற விடுங்கள். 10 நிமிடம் கழித்து கேரட் பேஸ்டுடன் தயார் செய்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லில் 4 ஸ்பூன் மற்றும் வைட்டமின் E மாத்திரை 2 எடுத்துக்கொண்டு அதன் உள்ளே இருக்கும் மருந்தை அதனுடன் சேர்த்து கலந்து 1 நாள் முழுவதும் பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்போது கிரீம் தயராகிவிட்டது.

ஸ்டேப்- 8

1 நாள் முடிந்த பிறகு நீங்கள் தயார் செய்த கிரீமை இரவு தூங்குவதற்கு முன்பு உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் காய வைத்து விட்டு தூங்கி விடுங்கள்.

இது மாதிரி வாரம் 2 முறை செய்தால் போதும் முகத்தில் இருக்கும் அனைத்து பருக்களும் நீங்கி முகம் வெள்ளையாக ஜொலிஜொலிக்கும். (குறிப்பு: சைன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மிருதுவான சருமம் உள்ளவர்கள் இந்த குறிப்பை உபயோகப்படுத்த வேண்டாம்)

இதையும் படியுங்கள் ⇒ 5 நாட்களில் முடி நீளமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க முடி கொத்து கொத்தாக வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil