Advertisement
அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்? | Athirstam Peruga
நம் நாட்டில் ஆன்மிகத்தின் மீதும், ஜோதிடத்தில் உள்ள வாஸ்து சாஸ்திரத்தின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். வீடுகளின் அமைப்புகளில் மட்டுமல்ல நம் வீட்டில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருப்பதன் மூலம் நம் வீட்டு கதவை அதிர்ஷ்டலட்சுமி தட்டுவாள் என்ற நம்பிக்கை உண்டு. அப்படி என்னென்ன பொருட்களை வீட்டில் வைத்தால் நம்முடைய வாழ்விலும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
மீன்கள்:
- இல்லத்தில் வண்ண மீன்கள் மற்றும் Golden Fish வளர்த்து வந்தால் நமக்கு நடக்கவிருக்கும் நல்ல விஷயங்கள் உடனே நடக்கும்.
- உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை கூட தடுக்கும் சக்தி உள்ளது.
இசைக்கருவி:
- வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்? இசைக்கருவிகளை வாசிக்க தெரியாவிட்டாலும் வீட்டில் வைத்திருந்தால் பேரதிர்ஷ்டம் கிடைக்கும். இசைக் கருவிகளை வாங்க முடியாவிட்டால் அதனை படமாக சுவரில் ஒட்டி வைக்கலாம்.
உண்டியல்:
- நம் முன்னோர்கள் இளம்வயதில் உண்டியல் வைத்திருப்பார்கள், அதற்கான முக்கிய காரணமே அதிர்ஷ்டம் தான்.
- வீட்டில் உண்டியல் வைத்திருந்தால் பெரும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் மட்டுமல்லாமல் பணத்தின் சேமிப்பும் அதிகரிக்கும்.
சுவாமி சிலை:
- அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்? தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் ஏற்படாமல் இருக்க இல்லத்தில் அல்லது கடைகளில் வெள்ளியால் ஆன சுவாமி சிலையை வைத்து பூஜை செய்தால் நலிவடைந்த தொழில் மீண்டும் விருத்தி அடையும்.
- மற்றவர்களுக்கு நீங்கள் பரிசு கொடுப்பதாக இருந்தாலும் அதை வெள்ளியால் ஆன சுவாமி சிலையை வாங்கி கொடுங்கள்.
வெள்ளி மீன்:
- Athirstam peruga : ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நல்லது நடப்பது மிகவும் அபூர்வமாக இருக்கும். தன் வாழ்வில் நிறைய கஷ்டத்தை பார்த்தவர்கள் நல்லது நடக்க வெள்ளியினால் செய்யப்பட்ட மீனை 21 நாட்களுக்கு படுக்கையின் கீழ் வைத்து உறங்கினால் நல்லது நடக்கும்.
லவங்கப்பட்டை:
- நீங்கள் ஏதேனும் சுப காரியங்களுக்காக வெளியில் செல்கிறிர்கள் என்றால் உங்களது சட்டை பையில் அல்லது பர்சில் சிறிதளவு லவங்கபட்டையை போட்டு வைத்தால் செல்லும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேலும் லவங்கப்பட்டைக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்று கூறப்படுகிறது.
கிராம்பு:
- Lucky Things in Tamil: கணவன், மனைவிக்குள் அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுடன் பிரச்சனை அதிகமாக இருந்தால் அதனை சரி செய்வதற்கு எப்போதும் அருகில் கிராம்பை வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கிராம்பு லக்ஷ்மி கடாட்சம் உள்ள பொருளாக கருதப்படுகிறது.
சந்தனம்:
- மன உறுதி குறைவாக இருப்பவர்கள் மன உறுதியை அதிகரிக்க 21 நாட்களுக்கு சந்தனம் மற்றும் வெள்ளிப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதனை தங்கள் படுக்கைக்கு கீழே வைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.
- சந்தனத்தை நீங்கள் கூடவே வைத்திருந்தால் கோபம் குறையும், நேர்மறை எண்ணம் அதிகரிக்கும். துளசியை உங்கள் வீட்டில் வளர்த்தால் நல்லது நடக்கும்.
காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா? |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |
Advertisement