அஷ்டம சனி என்ன செய்யும்.? | Ashtama Shani Effects in Tamil

Ashtama Shani Effects in Tamil

அஷ்டம சனி என்றால் என்ன? | Ashtama Sani Endral Enna

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம்.. ஆண் மற்றும் பெண் திருமண நிச்சயத்திற்கு முன்பு பல ஜோதிடங்கள் பார்க்கப்படுகிறது. முதலில் ஜாதகம் பார்க்கும்போது அவர்களுக்கு ஏதேனும் தோஷம் இருக்கிறதா என்று கட்டாயம் பார்க்க வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி, ஏழரை சனி, அஷ்டம சனி இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படி அஷ்டமி சனியில் ஒருவருக்கு திருமணம் செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்குமா.. இருக்காதா என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!

கண்டக சனி என்ன செய்யும்

அஷ்டமி சனி என்றால் என்ன தெரியுமா?:

முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்ம வினைகளை பொறுத்து சனி பகவான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பது ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி என்று கூறுகிறார்கள்.

வயதிற்கேற்ப ஒவ்வொருவருக்கும் இந்த அஷ்டம சனி பிரச்சனை ஏற்படும். அதாவது நான்கு வயது முதல் 15 வயது வரையுள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்கள் படிப்பில் சற்று மந்த நிலையில் இருப்பார்கள்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களுடைய குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

அஷ்டம சனி உள்ளவர்களுக்கு திருமணம் செய்யலாமா?

திருமண வயதில் உள்ளவர்களுக்கு ஜாதகம் பார்க்கும் போது கண்டிப்பாக அஷ்டமத்து சனி இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.

திருமண வயதில் உள்ளவர்களுக்கு அஷ்டம சனி இருந்தால் அவர்களுக்கு திருமணத்தில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனையும் மீறி அந்த தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது கணவன் மனைவி இருவருக்கும் அதிக சண்டையினால் பிரிவின்மை ஏற்படும்.

புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு திருமண வாழ்க்கையை பற்றி பல கனவுகள் மனதிற்குள் இருக்கும். ஆனால் இந்த அஷ்டம சனியானது அவற்றை அனுபவிக்க முடியாத நிலையில் கொண்டுபோய்விடும்.

அஷ்டம சனி எத்தனை காலங்களுக்கு இருக்கும்:

ஒருவருடைய ஜாதகத்தில் அஷ்டம சனி இரண்டு வருடங்கள் வரை நிலைப்பெற்றிருக்கும். அதுவரை தம்பதிகள் ஏற்படும் சண்டைகளை பொறுத்துக்கொண்டுதான் செல்லவேண்டும்.

அஷ்டமத்து சனி நடக்கும்போது கணவன் மனைவி இருவருக்குள் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து சென்றால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அப்படி விட்டுக்கொடுக்காமல் வாழ்க்கையை பயணித்தால் விவகாரத்தில் தான் முடியும்.

ஜென்ம சனி என்றால் என்ன?

அஷ்டம சனி காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்:

குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுகள், உறவினர்களால் சில பிரச்சனைகள், மனதில் எப்போதும் குழப்ப நிலை, சிலருக்கு வேலை பறிபோகும், பணியிடத்தில் தொடர்ந்து பிரச்சனை, பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும்.

அஷ்டம சனி பரிகாரம்:

அஷ்டம சனியிலிருந்து தப்பிக்க வாரத்தில் சனிக்கிழமைதோறும் சனி பகவான் இருக்கும் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கு ஏற்றிவர அஷ்டம சனியிலிருந்து விலகி நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்