வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குருபகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கபோகிறார்..!

Updated On: May 2, 2023 9:00 AM
Follow Us:
Gurupushyamrut Yoga 2023 in tamil
---Advertisement---
Advertisement

குரு புஷ்ய யோகம் 2023

பொதுவாக அனைவருக்கும் ஜாதகம் என்பது இருக்கும். அதில் இருக்கும் கிரகங்கள் மாற்றத்தை பொறுத்து தான் வாழ்க்கையில் நன்மை தீமைகள் நடைபெறும் அல்லவா..! அதனால் ஏதாவது ஒன்றை புதிதாக செய்ய போகிறோம் என்றால் உடனே நம்முடைய ஜாதகத்தை பார்த்து அதில் கிரகங்களில் மாற்றத்தை அறிந்து அது அவர்களுக்கு சாதகமாக உள்ளதாக என்பதை பொறுத்து தான் அந்த புதிய வேலையை செய்வார்கள். அப்போது தான் அது நன்றாக நடக்கும்.

அந்த நிலையில் தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். மேஷ ராசியில் இந்நாளில் புஷ்ய (பூசம்) நட்சத்திரம் என்பதால், புஷ்ய நட்சத்திரத்தில் குரு உதயமாகிறார். அதனால் அது குரு புஷ்ய யோகம் ஆகும். ஆகவே இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்ட நிலை ஏற்பட போகிறதாம் அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

குரு புஷ்ய யோகம் 2023:

இந்த குரு புஷ்ய யோகம் என்பது மற்ற ராசிகளை விட இந்த 4 ராசிகளில் அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறதாம். அப்படி என்ன ராசி என்று அனைவரும் யோசனையாக இருக்கும். அது எந்த ராசி என்று பார்க்கலாம் வாங்க..!

  • தனுசு
  • துலாம்
  • மேஷம்
  • மகரம்

இந்த 4 ராசிகளுக்கும் என்ன நன்மைகளை அளிக்க போகிறது என்று ஒவ்வொரு ராசிக்கும் தனி தனியாக பார்க்கலாம்..!

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். அதேபோல் 5 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். ஆகவே பணிபுரிபவர்களுக்கு வேலையில் உயர் பதவிகள், சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் அலுவலகத்தை பொறுத்த வரையில் அனைவரையும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அதேபோல் குருவின் மாற்றத்தால் அதிக உழைப்பிற்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 100 வருடத்திற்கு பிறகு மீன ராசியில் உருவாகும் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகின்றது

துலாம்:

பணிக்கு ஏற்ற இடத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தற்போது குரு பகவான் துலாம் ராசியில் 7 வீட்டில் உதயமாகிறார். இதனால் தொழிலை பொறுத்த வரையில் வெற்றியையும் லாபத்தை பெறுவார். அதேபோல் நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். முக்கியமாக காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேஷ ராசி:

இந்த காலம் பொன்னான காலம் ஆகும். பணிபுரியும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். முக்கியமாக உயர் அதிகாரியின் பாராட்டையும் ஆதரவையும் தக்கவைத்து கொள்வார்கள். ஏனென்றால், மேஷ ராசியின் முதலாம் வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் உங்களின் வேலை சிறப்பாக செய்யமுடியும். வேலை தேடிக்கொண்டு இருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்:

மகர ராசியின் 4 ஆவது வீட்டில் குரு உதயமாகிறார். இதனால் மகர ராசிக்கு தான் அதிர்ஷ்டத்தின் காற்று நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணிபுரியும் இடத்தில் தங்களின் சிறப்பான வேலையால் பாராட்டைப் பெறுவார்கள். முக்கியமாக முழு ஆதரவும் உங்கள் பக்கம் உள்ளதால் அதிகமாக கஷ்டங்கள் உங்களுக்கு இருக்காது.

குரு உதயமாவதால் இந்த 5 ராசிக்காரர்கள் தான் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நனைய போகின்றார்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now