ஏப்ரல் 14ம் தேதி குருபெயர்ச்சி | குரு பெயர்ச்சி பலன்கள் 2022

guru peyarchi 2022 to 2023 in tamil

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 | Guru Peyarchi 2022 to 2023 in Tamil

குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அருள்மிகு குருபகவான் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை கும்பராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். ஆகவே மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு பொது பலன்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம்:

குரு பகவான் மேஷ ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் அமரக்கூடிய நிலை இருந்தாலும், நீங்கள் அற்புத பலனையே பெறுவீர்கள். இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பயணத்தின் போது ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம்: இருளகற்றி ஒளி வழங்கும் சூரியனை தினமும் வணங்குங்கள். நன்மை உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் ரிஷபம்:

ரிஷப ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்தில் குரு அமர உள்ளார். உங்களுக்கு மூத்த சகோதரர் வகையில் நல்ல ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.

இந்த காலகட்டத்தில் குருவின் வருகையால் நிதி நிலை மேம்படும். மேலும், குரு பகவானின் இந்த மாற்றத்தின்போது திடீர் பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குடும்ப உறவுகளில் இனிமை இருக்கும். வியாபாரத்தில் கிடைக்காமல் இருந்த தொகை இப்போது கிடைக்கும்.

பரிகாரம்: ஆலங்குடி குருபகவானை நினைத்து முயற்சிகளை மேற்கொண்டால் வாழ்க்கை நலமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் மிதுனம்:

மிதுன ராசிக்கு 10ம் இடமான தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதுவரை தொழில், வேலை தொடர்பான விஷயங்களில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் தீரும்.

இந்த காலத்தில் நீங்கள் கடின உழைப்பால் அதிக பணம் சம்பாதிக்கலாம். வேலையில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டம் நீதிமன்றம் தொடர்பான பணிகளுக்கு சாதகமாக இருக்கும்.

உத்தியோகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும். தொழில் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் அந்த தொழிலில் கஷ்டப்படக்கூடிய நிலை இருந்தாலும், அதன் பின்னர் நினைத்தது போல சிறப்பானதாக இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனை வழிபட சங்கடங்கள் அகலும். ஒருமுறை திருநள்ளாறு சென்றால் பிரச்னை விலகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் கடகம்:

கடக ராசிக்கு 9ம் வீட்டில் குரு அமர்வதோடு, அவரின் 5ம் பார்வை உங்கள் ராசி மீது விழுவது விஷேசமானது.

உங்கள் வாழ்க்கை, தொழிலில் எப்பேர்ப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் 9ல் குரு இருப்பதால் எல்லா இன்னல்களிலிருந்தும் விடுபடக்கூடிய, தீர்வு காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்வது நல்லது. உங்களைக் காப்பாற்றக்கூடிய குருவின் பார்வை விழுவது மகத்தானது.

பரிகாரம்: திங்களூரில் குடியிருக்கும் சந்திரனை வேண்டி செயல்களில் ஈடுபட அச்சம் நீங்கும். வெற்றி உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம்:

சிம்ம ராசியின் எட்டாவது ஸ்தானத்தில் குரு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக இந்த காலத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

இதனுடன், பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகளும் உருவாக்கப்படும். திருமண வாழ்வில் பரஸ்பர இனிமை நிலைத்திருக்கும்.

எந்த ஒரு விஷயமும் நல்ல முறையில் நடப்பது போல் தோன்றும் ஆனால் நினைத்தபடி நடக்காது. எல்லாமே இருந்தும் மனத்திருப்தி இல்லாத நிலையிலேயே இருப்பீர்கள். தன்னிடம் இருப்பதை விடுத்து மனம் வேறு எதையோ நாடக்கூடிய சூழல் இருக்கும்.

பரிகாரம்: கண் விழித்ததும் சூரிய பகவானை வணங்கி விட்டு அன்றைய நாளைத் தொடங்குங்கள். சங்கடங்கள் பனிபோல விலகும்.

​குரு பெயர்ச்சி பலன்கள் கன்னி:

கன்னி ராசிக்கு 7ம் வீடான வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டணி, பங்குதாரர்களைக் குறிப்பிடக்கூடிய ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நிகழ்கிறது.

இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். எந்த ஒரு தொழில், வியாபாரமாக இருந்தாலும் அதில் இருக்கும் பிரச்சனை தீர்வதற்கும், பணிச்சுமை குறைவதற்கும் உங்கள் பங்குதாரர், தொழில் கூட்டாளி உதவுவார்கள்.

குடும்பத்தில் எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் உங்களின் துணை மிகவும் சாதகமாகவும், எல்லா விதத்திலும் ஆதரவாக செயல்படுவார். மனைவி வகையில் நல்வழி பிறக்கும். அவர்கள் மூலம் சொத்து, அதிர்ஷ்டங்கள் கைகூடும்.

பரிகாரம்: மகாவிஷ்ணு, மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள். நினைத்தவை நிறைவேறி மகிழ்வீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நிகழ்கிறது. உங்களைக் குறித்த மோசமான எண்ணம் பிறரிடம் இருந்தால் அது விலகும். அதே போல எதிரி அல்லது இவர் உதவ மாட்டார் என எண்ணிய உங்களுக்கு அவர் உதவக்கூடிய, நல்லது செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நோய் ஸ்தானம் என்பதால் ஆரோக்கிய பிரச்னை குறையக்கூடிய நிலை இருந்தாலும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ளவும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

பரிகாரம்: ஐயாவாடியில் இருந்து அருள்புரியும் பிரத்யங்கிரா தேவியை மனதில் நினைத்து செயல்பட சங்கடங்கள் விலகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு 5ம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் குரு வருவதோடு, அது திரிகோண ஸ்தானமாக அமைவது மிகவும் விசேஷமானது.

நீங்கள் தொட்டது துலங்கும். எதை எடுத்தாலும் நல்ல வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவோருக்கு ஆதரவும், வெற்றியும் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு.

பிள்ளைகள் மூலம் அதிர்ஷ்டமும், நற்பலனும் கிடைக்கும். குழந்தைப் பேறு அதிர்ஷ்டம் உண்டு. சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.

பரிகாரம்: திருத்தணி முருகனை மனதில் நினைத்து செயல்பட உங்கள் செயல்களில் நன்மைகள் உண்டாகும்.

தனுசு:

தனுசு ராசிக்கு 4ம் வீடான சுக, தாயார் ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் செய்வது நன்மையைத் தரும். தனக்கு எந்த ஒரு வீடு, மனை சொத்து என எதுவும் இல்லை என நினைக்கும் தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு, அவர்கள் விரும்பியதை விட அதிகமாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்தைக் குறித்த புலம்பல் குறையும்.

தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நிலம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்குச் சாதகமானதாகவும், லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

பரிகாரம்: அனுமனை நினைத்து செயல்படுங்கள். சனிக்கிழமைகளில் அவரை வழிபட்டால் சங்கடம் யாவும் தீரும்.

மகரம்:

குரு மகர ராசிக்கு 3ம் வீடான தைரிய ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். உங்களின் எந்த ஒரு பயணமும் சாதகமானதாக அமையும். நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் பிறருக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப காரியங்கள் சிறப்பாக நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சகோதர / சகோதரிகள் ஆதரவாகவும், அவர்களுக்கான சுப காரியங்கள் நடக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை மனதில் நினைத்து செயல்படுங்கள். சனிக்கிழமைகளில் அவரை தரிசித்தால் சங்கடங்கள் விலகும்.

​கும்பம்:

கும்ப ராசிக்கு 2ம் வீடான குடும்பம், தன ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் நிகழ உள்ளது. தனவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்கு முக்கியமான நபர்களை சந்திக்க வாய்ப்புகள் அமையும்.

உங்களின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பெற்றோர், வயதானவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: திருநள்ளாறில் குடியிருப்பவரும் சங்கடம் தீர்ப்பவருமான தர்ப்பாரண்யேசுவரரை மனதில் நினைத்து வேண்டி செயல்களில் ஈடுபட நன்மைகள் உண்டாகும்.

மீனம்:

சஞ்சாரம் நிகழ்கிறது. குரு அமர்ந்திருக்கும் ராசியை விட, அவரின் பார்வை பலனே அதிகம் என்பார்கள். இருப்பினும் ஜென்ம ராசியில் குரு இருந்தால் உங்களை நீங்கள் யார் என்பதை உணர்த்துபவராக இருக்கும். உங்கள் திறமையை வெளி கொண்டு வரும். உங்கள் மதிப்பை அதிகரிக்கும்.

ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வீட்டு பொறுப்பாக இருந்தாலும், நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் என எதுவாக இருந்தாலும் நீங்களே புதிய பொறுப்புகளை எடுத்துச் செய்வீர்கள். சிறப்பான வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகள், முக்கிய நபர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களின் தகுதிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

பரிகாரம்: ராமேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள்புரியும் ராமநாத சுவாமியை மனதில் நினைத்து செயல்படுங்கள். வினைகள் தீரும். நன்மைகள் உண்டாகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்