சனி திசை யோகம் | Sani Thisai Yogam

Sani Thisai Yogam

சனி திசை யாருக்கு யோகம்? | Sani Thisai Palangal in Tamil

சனி பகவான் என்றவுடன் ஒரு சிலருக்கு பயம் ஏற்படும். ஆன்மிகத்தின் மீது ஆர்வம் காட்டாதவர்கள் கூட சனி திசை கண்டு அச்சம் கொள்வார்கள். சனி பகவான் பலன்களை எவ்வித பாகுபாடுமின்றி வழங்கக்கூடியவர். சனீஸ்வரன் கெட்ட பலன்களை மட்டுமல்ல, நல்ல பலன்களையும் தரக்கூடியவர். நீங்கள் செய்யும் நன்மைகளையும், தீமைகளையும் வைத்து பலன்களை தருவார். நாம் இந்த தொகுப்பில் சனி திசையால் என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சனி திசை யோகம்:

 • மக்களுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் சனி திசை அல்லது புத்தி நடக்கும். இது 9 வருடங்கள் வரை நடக்கும். இந்த திசை சனீஸ்வரன் இருக்கும் இடத்தை பொறுத்து நல்ல அல்லது தீய பலன்கள் கிடைக்கும்.
 • பொதுவாக எந்த ராசியாக இருந்தாலும் சனி திசை நடக்கும் போது சற்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த திசை உள்ளவர்கள் சனிக்கிழமையில் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி கடவுளை வழிபடுவது நல்லது.

ராசிக்கான பலன்கள்:

 • ரிஷபம், துலாம், மகரம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை நல்ல பலன்களையே தரும்.
 • கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை தீய பலன்களை தரும்.
 • மிதுனம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் போன்ற லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை மந்தமான பலன்களை கொடுக்கும். ஜாதக கட்டத்தில் சனீஸ்வரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தால் மிதமான பலன்கள் கிடைக்கும்.

சனி திசை பலன்கள்:

 • Sani Thisai Yogam: பொருள் நஷ்டம் மற்றும் கண் சம்மந்தமான நோய் ஏற்பட்டால் சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பார்.
 • நல்ல பலன்கள் கிடைக்க சனி திசை ஜாதகக்கட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் இருந்தால் பொருளாதார வளர்ச்சி உங்களுக்கு கிடைக்கும்.
 • தீய பலன்கள் ஜாதகத்தில் 4-ம் இடத்தில் சனீஸ்வரன் இருந்தால் ஏற்படும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள், குழப்பங்கள் மிகுதியான அளவு இருக்கும்.
 • 5ம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் பூர்வீக தோஷம், பிள்ளைகளால் சண்டைகள், பணியிடத்தில் சில வகையான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
 • ஆறாம் வீட்டில் சனி பகவான் இருந்தால் நல்ல பலன் உண்டாகும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். பிரச்சனையை சமாளிக்கும் தைரியம் கிடைக்கும்.

சனி திசை யோகம்:

 • Sani Thisai Palangal in Tamil: ஏழாவது இடத்தில் சனி இருந்தால் திருமண தடை ஏற்படும். தொழிலில் கஷ்ட, நஷ்டங்களை சந்திப்பீர்கள். எட்டாவது இடத்தில் சனி இருந்தால் அது அஷ்டம சனி எனப்படும். இதனால் குடும்பத்தில் சில கருத்து வேறுபாடு ஏற்படும்.
 • ஒன்பதாவது இடத்தில் சனி இருப்பதால் வெளிநாடு செல்வதற்கான அதிர்ஷ்டம் கிடைக்கும். 10-ஆம் வீட்டில் சனி இருந்தால் புதிய வேலை, தொழில் என அனைத்திலும் உங்களுக்கு யோகம் கிடைக்கும்.
 • 11-ம் வீட்டில் சனி இருப்பின் சொத்துக்கள் வாங்கும் அமைப்பு, தன சேர்க்கை, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். சனி 12-ம் வீட்டில் இருந்தால் வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.

Sani Thisai Pariharam in Tamil:

 • சனிபகவானுக்கு ஏற்ற யாகங்களை சனிதிசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டம சனி நடைபெறும் காலங்களில் செய்யலாம்.
 • பாதிப்புகள் நீங்க ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று வரலாம்.
சூரிய திசை யாருக்கு யோகம் தரும்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்