ஜாதகத்தில் கேது பலன்கள் இருந்தால் எப்படி இருக்கும்

Advertisement

ஜாதகத்தின் கேது பலன்கள்  

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம்  பதிவில் ஜாதகத்தில்  கேதுவின் பலன்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே ஜாதகத்தில் ராகு கேது என்றாலே சிலருக்கு பயம் ஏற்படும். அந்த வகையில் கேதுவானது ஒரு ராசிக்கு வரும் பொழுது ஒருவருடைய உலக வாழ்க்கையில் இன்பத்தை விட்டுவிட்டு சன்யாசம், ஆன்மிகம், பக்தி இவற்றை நோக்கி எடுத்துக்கொண்டு போக கூடிய கிரகம் கேதுதான். கேதுவிற்கும் சந்திரனுக்கும் தொடர்புகள் ஏற்படும் பொழுது ஜாதகத்தில் பல மாற்றங்களும் ஏற்படும். மேலும் கேதுவின் பலன்களை நம் பதிவில் படித்து  அறியலாம் வாங்க..

நாக தோஷம் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது

 

ஜோதிடத்தில் கேது இருப்பதால் ஏற்படும் பலன்கள்:

ஜோதிடத்தில் கேது இருப்பதால்  அமைதியையும்,  ஆன்மிகத்தையும் அதிகம் விரும்புவார்கள்.

கேதுவின் ஆதிக்கம் இருக்கும் பொழுது தனிமையை அதிகம் விரும்புவார்கள், மற்றவர்களுடைய எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். எல்லாம் விஷயங்களிலும் சலிப்புகள் ஏற்படும்.

ஜோதிடத்தில் கேது இருக்கும் பொழுது குருவின் தேடல், தியானம், சுயதேடல், ஞானம் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

கேது பகவான் ஜாதகத்தில் இருக்கும் பொழுது சித்தர்களின் தேடல் அதிகம் இருக்கும், ஆன்மிகம் சம்மந்தப்பட்ட புத்தங்களை அதிகம் விரும்புவார்கள். அதுமட்டுமில்லாமல்  ஆன்மிகத்தில் நம்பிக்கை உடையவர்களை மட்டும்தான் நண்பர்களாக வைத்திருப்பார்கள்.

கேதுவுடைய செயல்பாடுகள் இருக்கும் பொழுது குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் அதிகம் ஈடுபாடுகள் இருக்காது.

கல்வியில் சிக்கல் ஏற்படும் மற்றும் ஆராச்சி மனப்பான்மை அதிகம் ஏற்படும்.

மேலும் கேதுவின் பலன்கள் 12 வீடுகளிலும்  ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த இடங்களில் இருந்தால் எத்தகைய பழங்களை  தருகிறது என்று பார்க்கலாம் வாங்க..

லக்னம் முதல் 12 வீடுகளில் கேது நின்ற பலன்கள்:

 kethu thisai

லக்னம் 1 ஆம் இடம்:

கேது முதல் லக்னத்தில் இருப்பதால் அவர்களுக்கு அதிஷ்டம் உடையவராக இருப்பார். அமைதியாகவும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு தெரியாத விஷயத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். தனிமையில் அதிகம் கவனம் செலுத்துவார்கள் தனக்கென்று ஒரு உலகம் என்று நினைத்து தனிமையில் அதிகம் இருக்க விரும்புவார்கள். ஒரு சிலருக்கு கல்வியில் கவனம் குறையும். கல்வியில் கவனம் குறைந்தாலும் ஞானம் அதிகமாக இருக்கும். மற்றவர்களுடன் நெருங்கி பழக மாட்டார்கள்.

லக்னம் 2 ஆம் இடம்:

கேது இரண்டாம் இடத்தில் அமரும் பொழுது தனம், குடும்பம், வாக்கு போன்றவையே  ஸ்தனங்கள் என்று அழைக்கப்படுகிறது. கேது அமரும்பொழுது பேசுவதில்  தெளிவு காணப்படும். அவர்கள் பேசும் வாக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்துக்கள் வாங்குவதற்கும் கேது நன்மை செய்கிறது. லக்கனத்தில் 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் திருமண வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் அமையும்.

லக்னம் 3 ஆம் இடம்:

கேது மூன்றாம் இடத்தில் அமரும் பொழுது  அரசியல் தலைவர்களுக்கு வசனம் எழுதி கொடுப்பவராக கொடுக்கும் எழுத்தாளராகவும் இருப்பார்.  செல்வச் செழிப்பு அதிகம் நிறைந்தவராகவும், மதிப்பு மிகுந்தவராகவும்  இருப்பார். எல்லாம் வகையான சுகத்தையும் அனுபவிக்க கூடியவராக இருப்பார். 3 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் அதிகம் தன்னம்பிக்கை உடையவராக இருப்பார்.

லக்னம் 4 ஆம் இடம்:

கேது நான்காம் இடத்தில் இருக்கும் பொழுது நிலம், வீடு, வாகனம், தாய் இவை எல்லாம் நான்காம் இடம் ஆகும். இந்த நான்காம் இடத்தில் கேது அமர்வதால் நன்மைதான். அதுமட்டுமில்லாமல்  கேதுவுடன் செவ்வாய் சேர்ந்து  அமைந்தால் மிகவும் சிறப்புதான். 4 ஆம் இடத்தில் கேது  இருப்பதால் நெருக்கிய உறவுகள் பகையாளியாக  வாய்ப்பு இருக்கிறது. இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்  ஏற்பட வாய்ப்புகளும் உள்ளது. தாய் மீது கவனம் செலுத்துவது நல்லது. புதிதாக வீடு மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

லக்னம் 5 ஆம் இடம்:

கேது ஐந்தாம் இடத்தில் இருக்கும் பொழுது காதல், புத்திரர், பூர்விக சொத்து இவை  எல்லாம் ஐந்தாம் இடமாகும். இந்த ஐந்தாம் இடத்தில் கேது அமரும் பொழுது கற்பனை பலம் கொண்ட கவிதை எழுதுபவராக இருப்பார். காதலித்து திருமணம் செய்பவராக இருப்பர். திருமணம் ஆனா சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. வயிற்று சம்மந்தப்பட்ட  பிரச்சனைகள் அதிகம் உண்டாகும்.

லக்னம் 6 ஆம் இடம்:

கேது ஆறாம்  இடத்தில் அமரும் பொழுது நோய், எதிரி, கடன் போன்றவை ஆறாம் இடமாகும்.  ஆறாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் எதிர்மறையான சிந்தனைகள் இருக்கும். அதனால் எதிரிகள் உண்டாகலாம். கடன் பிரச்சனைகள் அதிகம் இருக்கும். 6 ஆம் இடத்தில் கேது இருப்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆறாம் இடத்தில் குரு, சுக்கிரன் ஆகியோர் சேரும் பொழுது அதிக நன்மைகளும் ஏற்படும்.  இதுவே சனி, செய்வாய் அமையும் பொழுது  துன்பங்கள் வந்து சேரும்.

ராகு கேது எந்த இடத்தில் இருந்தால் தோஷம் தெரியுமா?

லக்னம் 7 ஆம் இடம்:

கேது ஏழாம் இடத்தில் அமரும் பொழுது  களத்திர ஸ்தானமான மகிழ்ச்சி, துன்பம், பிரிவு, காமம், பல பெண்களுடன் நட்பு, சிக்கல், எதிர்பாராத பிரச்சனை போன்றவை ஏழாம் இடத்தில் ஆரம்பிக்கிறது. இந்த ஏழாம் இடத்தில கேது பகவான் அமரும் பொழுது கணவன் மனைவிக்கு பிரச்சனைகள் ஏற்படும் விட்டுகொடுத்து செல்வது நல்லது. அதிகமான ஆசைகள் மற்றும்  காம எண்ணங்கள் அதிகம் இருக்கும். ஏழுவில் சில நல்ல கிரகங்கள் அமையும் பொழுது இதனுடைய தாக்கங்கள் குறையும்.

லக்னம் 8 ஆம் இடம்:

எட்டாம் இடத்தில் ஆயுள் ஸ்தானம் என்பதால் எட்டாம் இடத்தில் கேது பகவான் அமரும் பொழுது ஒரு சிலருக்கு குறைந்த ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழமுடியும். உடலில் அதிகம் கவனம் செலுத்தி வருவது அவசியம். 8 ஆம் இடத்தில் கேது  இருப்பதால் அதீத புத்திசாலியாக இருப்பார். ஆனால் தேவையில்லாத பிரச்சனைகள் வந்து சேரும். மனத்தை ஒருமுகபடுத்தி செயல் திறன் கொண்டவராக இருப்பார்.

லக்னம் 9 ஆம் இடம்:

ஒன்பதாம் இடத்தில் கேது அமரும் பொழுது பாக்கியஸ்தானம், தந்தை, வெளிநாடு பயணம் ஆகியவை ஒன்பதாம் இடத்தில் தொடர்கிறது. இந்த ஒன்பதாம் இடத்தில் கேது அமரும் பொழுது காசி, இராமேஸ்வரம், செல்லும் சன்னியாசியாகவும் இருக்கலாம் அல்லது ஆராச்சியாளராக இருக்கலாம். ஆழ்ந்து சிந்திக்க கூடிய அறிவை கேது மூலம் பெறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல்  வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பாவச் செயல்களை துணிந்து செய்யக்கூடியவராக இருப்பார்கள்.

லக்னம் 10  ஆம் இடம்:

பத்தாம் இடத்தில்  கேது அமர்வதால் தொழில் ஸ்தானம் கிடைக்கிறது. தொழில் ஸ்தானம் என்பதால் ஆன்மிகம் மற்றும் ஞானம் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணி, ஜோதிட ஆராய்ச்சிகள் போன்ற தொழில்களில் இருப்பார்கள். ஏழைகளுக்கும் பிறர்க்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள். பத்தாம் இடத்தில் கேது இருப்பதால் தொழில் நடத்தும் நபருக்கு அதிக இலாபத்தையும் தருகிறது.

லக்னம் 11 ஆம் இடம்:

பதினொன்றாம் இடத்தில் கேது அமரும் பொழுது லாபம், மகிழ்ச்சி அமைகின்றது.1 1 ஆம் இடத்தில் கேது பகவான் அமரும் பொழுது தனது திறமையால் உயர்பவராக இருப்பார்.  11 ஆம் இடத்தில் கேது இருக்கும் பொழுது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று நினைப்பார்கள்.  பலரிடம் நன்மதிப்புகளும், மரியாதையும் இவரை வந்து சேரும். அதிகம் படிக்க கூடிய திறமை வாய்ந்தவராக இருப்பார்கள்.

லக்னம் 12 ஆம் இடம்:

பன்னிரெண்டாம் இடத்தில் கேது அமரும் பொழுது நஷ்டம், செலவுகள் போன்றவை ஏற்படும். அதாவது 12 ஆம் இடத்தில் கேது பகவான் அமரும் பொழுது  வீட்டை விட்டுவிட்டு  வெளியே சென்றுவிடுவார்கள். பணத்தால் பல நஷ்டங்கள் ஏற்படும். இந்த ஜாதகர்களுக்கு அடுத்த பிறவி என்பது கிடையாது. தனிமையை அதிகம் விரும்பி சித்தராகவும் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் ஞானியாகவும் இருப்பார்கள்.

ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement