தனுசு ராசி ஏழரை சனி முடிவு எப்போது? | Elarai Sani For Dhanusu Rasi in Tamil

Elarai Sani For Dhanusu Rasi in Tamil

தனுசு ஏழரை சனி முடிவு 2022 | Elarai Sani details in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று ஆன்மிகம் பதிவில் ஏழரை சனி எப்போது முடிகிறது என்பதை பற்றித்தான் பார்க்க போகிறோம். பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டது  வகையில் ஒன்பது நவகிரங்களில் எட்டு நவகிரணங்கள் ஒரு கட்டத்திலிருந்து மற்றோரு கட்டத்திற்கு செல்வது மிகவும் வேகமாக மற்றும் தன்மை உடையது. அதில் உள்ள வேகத்தை போல் வாழ்க்கை கட்டத்தில் பலன்கள் இருக்காது ஆனால் சனிபகவான் மட்டும் ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஆனால் அந்த ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு வந்தால் எந்த அளவிற்கு நன்மையோ அந்த அளவிற்கு கஷ்டத்தையும் அளிக்கும். இந்த வருடம் எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு சென்றார் என்பதை பொதுநலம்.காம் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை தெரிந்துகொள்ள சனி பெயர்ச்சி 2020 – 2023 இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். வாங்க இப்போது தனுஷ் ராசிக்கு எப்போது ஏழரை சனி முடிவைடைகிறது என்பதை பார்ப்போம்.

தனுசு ஏழரை சனி முடிவு:

மேஷ ராசிக்கு சனியின் 11 இடத்தில் லாப ஸ்தானமாக இருப்பதால் மேஷ ராசிக்கு சனியின் பாதிப்பு குறைவாக இருக்கும்.

ரிஷப ராசிகாரர்களுக்கு பத்தாவது இடமான  ஜீவன ஸ்தானத்தில் சனி இருக்கிறார் அதனால் இவருக்கும் சனியின் பாதிப்பு குறைவாக இருக்கும்.

மிதுன ராசிக்காரர்க்கு சனியின் பார்வைப்பட்டு சில கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். இவருக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் வசிக்கிறார். அவருக்கு அஷ்டம சனி முடிவடைகிறது.

கடகராசிக்காரர்களுக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சனி பார்வை படுவதால் அவருக்கு அஷ்டம சனி ஆரம்பமாகிறது.

சனி பெயர்ச்சி 2022 எப்போது, யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

 

7ம் இடமான சப்தம ஸ்தானத்தை கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டக சனி ஆரம்பம் ஆகிறது.

கன்னி ராசியினருக்கு 6ம் இடமான ரணருண ஸ்தானத்தில் சனி இருப்பதால் கன்னி ராசியினருக்கு பாதிப்பு இருக்காது.

5ம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கொண்ட துலாம் ராசிக்காரர்களே அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது.

விருச்சிக ராசியினருக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சனி பார்வை இருப்பதால் இப்போது அர்த்தாஷ்டம சனி ஆரம்பமாகிறது.

 தனுஷ் ராசியினருக்கு ஏழரை சனியினால் கடும் பாடுபட்டு இருப்பீர்கள். ஏழரை சனி முடிவடைகிறது. 

ஏப்ரல் 29.2022 முதல் ஜூலை 12 தேதிவரை கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாவதால் தனுசுராசிக்கு சனிபாகவனிடமிருந்து 75 நாட்கள் விடுபடுகிறார். கும்ப ராசிக்கு சனி பெயர்ச்சியாவதால் தற்காலிகமாக தனுசுராசியில் இருந்து இடம் பெயருகிறார். 

மகராசியினர்க்கு 2ம் இடமான தன, வாக்கு, குடும்ப ஸ்தானதில் சனியின் பார்வை படுகிறது. அது  பாத சனியாக ஆரம்பமாகிறது.

கும்ப ராசிகாரர்களுக்கு முதல் இடமான ஜென்ம ஸ்தானத்தில் பார்வை படுவதால் ஜென்ம சனி ஆரம்பமாகிறது.

மீன ராசிக்காரர்களுக்கு 12ம் இடமான அயன் சயன் போக ஸ்தானத்தில் சனியில் காற்று பட்டு அது விரய சனியின் பலன்களை அளிக்கும். விரய சனி ஆரம்பம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்