வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருமண வகைகள் | Thirumanam Types in Tamil

Updated On: November 17, 2023 1:11 PM
Follow Us:
Thirumanam Types in Tamil
---Advertisement---
Advertisement

இந்து திருமண வகைகள் | Marriage Types in Tamil

திருமணம் என்பது அனைத்து பண்பாடுகளிலும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகுதான் புதிய அத்தியாய வாழ்க்கையினை தொடங்குகிறார்கள். இந்து திருமணங்களை பற்றி பண்டைய கால நூல்களில் பல வகையான திருமண வகைகள் நமக்கு சுவாரஸ்யமான தகவலை கொடுத்துள்ளது. அதிலும் இந்து மதங்களில் எட்டு வகையான திருமண வகைகள் அமைந்துள்ளன. வாங்க ஒவ்வொரு திருமண வகைகள் என்னென்ன உள்ளது என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

திருமணம் வேறு பெயர்கள்

பிரம்ம விவாகம்:

திருமண வகைகளில் உச்ச உயர்வாக இருப்பது பிரம்ம விவாகம். இந்த வகை திருமணத்தில் மணமகனின் குடும்பம் மணமகனுக்கான தகுந்த பொண்ணை தேர்வு செய்வார்கள். அதன் பிறகு மணமகளின் தந்தை தகுந்த மணமகனை வீட்டிற்கு அழைப்பார்கள். இந்த பிரம்ம விவாகம் முகூர்த்ததில் தனக்கு வரப்போகும் மணமகன் நன்றாக படித்து நல்ல பழக்கவழக்கத்துடன் இருப்பார்களா என்பதை தேர்வு செய்து மகளுக்கு மனம் முடித்து வைப்பார்கள்.

தெய்வ விவாகம்:

இந்த வகை திருமணம் தாழ்ந்த வகையை சேர்ந்ததாகும். மணமகளுடைய குடும்பம் தங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு குறிப்பிட்ட காலம் வரை காத்திருப்பார்கள். அந்த நேரத்திற்குள் அவளுக்கென தகுந்த மணமகன் அமையவில்லை என்றால் தியாகமாக கருதி அவளை சமய குருவிற்கு மணம் முடித்து வைப்பார்கள்.

அர்ஷ விவாகம்:

இந்த அர்ஷ விவாக திருமண வகையில் ஒரு பெண்ணை முனிவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். இந்த விவாகத்தில் இரண்டு மாடுகளை வாங்கிக்கொண்டு பெண்ணை மனம் முடிப்பார்கள். இந்த திருமண வகையில் வணிக பரிமாற்றம் இருப்பதால் இதை உயர்ந்த வகை திருமணமாக யாரும் பார்ப்பதில்லை.

ப்ரஜபத்ய விவாகம்:

இந்த வகை திருமணத்தில் தன்னுடைய பெண்ணிற்கு ஏற்ற மாப்பிளையை தந்தையே தேடி செல்வார். பையனை தேடி தந்தை செல்வதால் இதுவும் ஒரு தாழ்த்தப்பட்ட திருமண வகையை சேர்ந்ததாகும்.

ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா

அசூர் விவாகம்:

அசூர் விவாக திருமணத்தில் மணமகனிடம் இருந்து பரிசு பொருட்களையும், பணத்தையும் வாங்கும் பெண்ணின் குடும்பமாகும். இதை காரணமாக வைத்து பல நேரத்தில் பெண்களுக்கு தகுந்த மணமகன் அமைவதில்லை. பெண்களின் குடும்பத்தார்கள் பணத்தினை பெறுவதால் பொருத்தமற்ற பையனை திருமணம் செய்துக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

கந்தர்வ விவாகம்:

இந்த விவாகத்தை காதல் திருமணம் என்று சொல்கிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் அவர்களுடைய காதலை ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி இரகசியமாக திருமணம் செய்துகொள்வார்கள்.

திருமணத்தில் இணைய கூடாத ராசிகள்..! Thirumana Rasi Porutham Tamil..!

ரக்ஷாஸ் விவாகம்:

இந்த வகை திருமணத்தில் மணமகன் மணமகளின் குடும்பத்தாரோடு சண்டை போடுவார்கள். பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை திருமணம் செய்துக்கொண்டு அழைத்து செல்வார்கள்.

பிஷாஷ் விவாகம்:

இந்த பிஷாஷ் விவாக திருமணத்தில் மணப்பெண்ணை மயக்கி அவள் உறக்க நிலையில் இருக்கும் போது அந்த பெண்ணை மனம் முடித்துவிடுவார்கள்.

இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். ஆன்மீக தகவல்கள் 
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now