திருமாலின் 10 அவதாரங்கள் | Thirumalin Pathu Avatharam in Tamil

Advertisement

பெருமாள் அவதாரம் எத்தனை..? | Thirumalin Avatharangal Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம் .காம்  ஆன்மிகம் பதிவில் பெருமாள் 10 அவதாரங்களின் பெயர்களை பார்க்கப்போகிறோம். பெருமாள் என்பவர் ஒருவர் மட்டும் தான் அவர் எடுக்கும் அவதாரத்தை நாம் தனி தனியாக பெயர்களை வைத்து தனி தனியாக வணங்கி  வருகிறோம். பெருமாள் ஒவ்வொரு அவதாரத்தை ஏன் எடுத்தார் அதன் காரணம் என்ன என்பதாகி பற்றியும் இந்த பதிவில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.

யாரும் அறியாத சிவனின் அவதாரம் எத்தனை தெரியுமா..?

பெருமாள் அவதாரம் எத்தனை..?

பெருமாள் பத்து அவதாரத்தை எடுத்துள்ளார். அதன் பெயர்களை இப்போது காண்போம்.

  1. மச்ச அவதாரம்
  2. கூர்ம அவதாரம்
  3. வராக அவதாரம்
  4. நரசிம்ம அவதாரம்
  5. வாமன அவதாரம்
  6. பரசுராமர் அவதாரம்
  7. இராம அவதாரம்
  8. பலராம அவதாரம்
  9. கிருஷ்ண அவதாரம்
  10. கல்கி அவதாரம் ஆகியவை ஆகும்.

திருமாலின் மச்ச அவதாரம்:

திருமாலின் மச்ச அவதாரம்

  • மச்சம் என்பது மீன் என்று அர்த்தம். திருமால் கிருயுகம் நடைபெறும் பொழுது, மீன் வடிவில் தோன்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றினார்.

கூர்ம அவதாரம்:

கூர்ம அவதாரம்

  • கூர்ம அவதாரம் திருமாலின் இரண்டாவது அவதாரம் ஆகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்படும். பாற்கடலில் அமிர்தம் கிடைக்கும் என்று தேவர்களும் அரசர்களும் கடைய ஆரம்பித்தார்கள். அப்போது திருமால் கூர்ம அவதாரரத்தை எடுத்து மந்திர மலையை மெத்தையாகவும், பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய ஆர்ப்பித்தார்கள்.

வராக அவதாரம்:

வராக அவதாரம்

  • இந்த அவதாரத்தை திருமால் கிருத யுகத்தில் எடுத்தார். வராக என்பது பன்றி என்று பொருள் தரும். இரண்யாட்சன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் பெற்ற தவத்தினால் கிடைத்த சக்தியை வைத்து. கடலுக்கு அடியில் மூன்று உலகையும் ஆட்டி படைத்தார் அப்போது திருமாலிடம் இவ்வுலகை காப்பாற்ற வேண்டி வணங்கினார். அப்போது திருமால் வராக அவதாரத்தை எடுத்து உலகை காப்பாற்றினார்.

நரசிம்ம அவதாரம்:

நரசிம்ம அவதாரம்

  • நரசிம்மம் என்பது நரன் சிம்மம் என்று பிரிக்கலாம். இந்த இரண்டு பெயருக்கும் தனி தனி அர்த்தங்கள் உள்ளது. அதில் நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம் என்று பொருள் தரும்.
  • பிரம்ம தேவனிடம் இரண்யகசிபு என்ற அரக்கன் ஒருவன் வரம் வேண்டி தவம் புரிந்தான். அப்போது அவனுக்கு பிரம்மன் காட்சி அளித்தார். அந்த அரக்கன் பிரம்ம தேவனிடம் எனக்கு சாக வரம் தரவேண்டும் என்று வரம் கேட்டான். அதற்கு பிரம்மம் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது நிச்சயம் உண்டு. அதான் நீ வேறு வரத்தை கேள் என்று பதில் அளித்தார்.
  • அப்போது அந்த அரக்கன் எனக்கு அழிவு என்பது ஆயுதத்தினாலோ, பகலிலோ இரவிலோ, உயிர்களிலோ, விலங்குகலிலோ  தேவர்களாலோ  மற்றும் முனிவர்கள் மூலம் கிடைக்கக்கூடாது என்று வரம் பெற்றான்.
  • அந்த வரத்தை பெற்று தனக்கு இறப்பு என்பது கிடையாது என்று நினைத்து உலகை ஆட்டிப்படைத்தான். அவனின் தொல்லை தாங்க முடியாமால் திருமால் நரசிம்ம வடிவில் தோன்றி அவனின் உயிரை எடுத்தார்.

வாமன அவதாரம் :

வாமன அவதாரம்

  • இந்த அவதாரம் திருமாலின் ஐந்தாவது அவதாரமாகும். வாமனன் என்பது குள்ளவடிவினன் என்று பொருள். பலிச்சக்ரவர்த்தியின் திமிரையும் கர்வத்தை நிறுத்தி அவருக்கு அருள் புரியவும் இந்த வாமனன் அவதாரத்தை எடுத்தார் பெருமாள்.

பரசுராமர் அவதாரம்:

பரசுராமர் அவதாரம்

  • இந்த அவதாரத்தை திரேதா யுகத்தில் திருமால் எடுத்தார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு விதி விளக்கு பரசுராமர் ஆவார். தந்தை இட்ட ஆணையை தட்டாமல் தாயையையும் தங்கையையும் கோடாலியால் வெட்டி கொன்றான். அவர் கையில் இருக்கும் கோடாலி சிவனிடமிருந்து பெற்ற பரிசு என்று சொல்வார்கள்.

இராம அவதாரம்:

இராம அவதாரம்

  • இந்த அவதாரம் திருமாலின் ஏழாவது அவதாரமாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற இதிகாச நூலக கருதப்படுகிறது இராமாயணத்தை. இந்த இராமாயணத்தில் இராமரை மையப்படுத்தி எழுதப்பட்டது.
  • அடுத்தவரின் மனைவியின் மீது ஆசைப்படுபவர் பின்பு கடுமையான மரணத்தை வரமாக பெறுவார் என்று சொல்லப்படுகிறது இந்த அவதாரத்தில்.

பலராமன் அவதாரம்:

பலராமன் அவதாரம்

  • பலராமன் திருமாலின் எட்டாவது அவதாரமாகும். இந்த அவதாரத்தை துவார யுகத்தில் எடுத்தார். பலராமரே பிருந்தாவனத்தில் கிருஷ்ணருடன் இருந்து பல குறும்பு தனத்தை செய்தார்.

கிருஷ்ண அவதாரம் பெயர்கள்:

கிருஷ்ண அவதாரம்

  • கிருஷ்ண அவதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. இந்த அவதாரத்தில் கிருஷ்ணர் செய்த குறும்புதனத்தை அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் கிருஷ்ணர்.
  • இந்த அவதாரத்தில் கம்சன் என்ற அரக்கனை கொள்ளுதல், திரௌபதியின் மானத்தை காத்தல் என நிறைய இந்த அவதாரத்தில் செய்துள்ளார். இவருக்கு இந்த அவதாரத்தில் கண்ணன், கோவிந்தன், கேசவன், கோபாலன் என பெயர்கள் உள்ளது.

கல்கி அவதாரம்:

கல்கி அவதாரம்

  • இந்த அவதாரம் கலியுகத்தில் நிகழும் என்று சொல்லப்படுகிறது. கலியுகத்தில் தர்மத்தை விட அதிகம் அதர்மத்தின் அளவு அதிகமாகி இருக்கும். அப்போது அதர்மத்தை தடுத்து மக்களை நல்வழி படுத்துவார் என்று சொல்லபடுகிறது. அதையும் காத்திருந்து தெரிந்துகொள்வோம். அவர் காட்சி அளிக்கும் போது அவர் வெள்ளை நிறகுதிரையில் வருவார் என்று சொல்கிறார்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement