வீட்டு கதவு வாஸ்து
நண்பர்களே வணக்கம் நாள் தோறும் அனைவருக்கும் பயன்படும் படி தினமும் பதிவுகளை பதிவிட்டுக்கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று வாஸ்து சாஸ்திரம் படி நிறைய சொல்லி வருகிறோம். இன்று இந்த திசையை பார்த்து உங்கள் வீடு இருந்தால் மறக்காமல் இதை செய்திடுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்துகொண்டு தான் இருக்கும் அதனால் இந்த பதிவை படித்துவிட்டு மறக்காமல் இதை செய்யுங்கள்.
எந்த திசையில் வாசல்:
விட்டு வாசல் என்று அதில் முக்கியமாக தெய்வம் உள்ளது என்று நம்புகிறார்கள் அனைவருமே அப்படி எந்த திசையை பார்த்த படி வாசல் இருந்தால் தெய்வம் வரும். அனைத்து தெய்வத்திற்கும் சக்தியானது உள்ளது. அது எங்கு பலிக்கும் எங்கு பலிக்காது என்பது உள்ளது. அதில் முக்கியமாக இந்த எமதர்மனுக்கு என்று திசை உள்ளது. சாஸ்திரம் சொல்கிறது. அப்படி இருக்கும் போது வீட்டைவிட்டு நல்ல காரியங்களுக்கு செல்வோம் அதேபோல் கேட்ட காரியங்களுக்கும் செல்வோம். அதனால் அப்போது நாம் செல்லும் திசை எமதர்மனுக்கு உகந்தது என்றால் அது சரி வராது.
ஆகவே வீட்டை விட்டு செல்லும் போது நிலைவாசப்படிக்கு மேல் விநாயகர் படத்தை பார்த்து செல்லும் படி வைக்கவும். அப்படி உங்கள் வீட்டில் வெளியில் மாட்டி வைக்க முடியவில்லை என்றால் உள் பக்கம் வீட்டிற்குள் மாட்டி வைக்கலாம்.
பொதுவாக எந்த விஷயம் செய்தாலும் விநாயகரை முதலில் வணங்குவது வழக்கம். அனைவரின் வீட்டிலும் ஒரு விநாயகர் படமானது கண்டிப்பாக இருக்கும். விநாயக்கரில் இரண்டு உள்ளது அதில் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரண்டு உள்ளார்.
வலம்புரி விநாயகர் விசேஷமானவர் என்றாலும் அவரை எல்லா இடத்திலும் வைத்து வழிபட மாட்டார்கள். காரணம் அவரை வழிபட்டால் நெய் வேத்தியம் வைக்க வேண்டும். தினசரி அவருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து வர வேண்டும்.வலம்புரி விநாயகர் வளமான வாழ்க்கையை கொடுப்பவர் என்றும், இடம்புரி விநாயகர் இடைஞ்சலை கொடுப்பவர் என்றும் தவறான ஒரு கருத்து உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. வலம்புரி விநாயகர் வளமான வாழ்க்கையை கொடுப்பார். இடம்புரி விநாயகர் இன்னல்களை தவிர்ப்பார் என்பது தான் அதற்கான அர்த்தம்.
அதனால் உங்கள் வீடு தெற்கு திசையை நோக்கி இருந்தால் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது விநாயகரை பார்த்து செல்வது போல் வாசல் படிக்கு மேல் மாட்டிவைக்கவும். இல்லையென்றால் நிலை வாசல் படிக்கு மேல் மாட்டிவைக்கவும்.
இது உங்களுக்கு உதவும் ⇒ 👉 வாஸ்து படி வீட்டில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் நஷ்டம் தான் வரும்..!
உங்கள் வீட்டு சமையலறையை வாஸ்துப்படி இப்படி வைத்துள்ளீர்களா .!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |