நாழிகை கணக்கு என்றால் என்ன?

Naligai Calculation

நாழிகை கணக்கு என்றால் என்ன?

Naligai Calculation:- ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை பற்றி அறியவிரும்பும் வாசகர்களுக்கு அன்பான வணக்கம். இன்றைய பதிவில் நாழிகை என்றால் என்ன?, நாழிகை அட்டவணை மற்றும் நாழிகை கணக்கிடும் முறை பற்றி படித்து தெரிந்து கொள்வோம். 24 நிமிடம் கொண்ட ஒரு கால அளவு ஆகும். நாழிகை என்பது பண்டைய கால நேர அளவாகும். அதாவது பழங்காலத்தில் மக்கள் இப்போது உள்ள 1 மணி நேரக்கணக்கு போல நாழிகை கணக்கை பயன்படுத்தி வந்தனர். சரி வாங்க நாழிகை பற்றிய தகவல்களை இப்பொழுது படித்தறிவோம்.

நாழிகை என்றால் என்ன?

நாழிகை என்பது பண்டையகால தமிழர் பயன்படுத்திய ஒரு கால அளவாகும். இரு விரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். அதேபோல் கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம்.

ஒரு செகண்ட் (Second) என்பதோ ஒரு நொடி.

அறுபது நொடி – ஒரு மணித்துளி (நிமிடம்), அறுபது மணித்துளி ஒரு மணி.

பகல் முப்பது நாழிகை, இரவு முப்பது நாழிகை.

ஒரு நாள் – அறுபது நாழிகை.

இரண்டரை நாழிகைப் பொழுது, இப்போதுள்ள ஒரு மணி.

காலை மணி பத்தாகும்போது, நாழிகையும் பத்தேயாகும்.

அது எப்படி என்றால்? காலை ஆறு மணிக்கு முதல் நாழிகை தொடக்கம். 10 மணிக்கு இடையில் நான்கு மணி நேரம். நான்கு மணியை இரண்டரையால் பெருக்கினால் (4 x 2 1/2 = 10) பத்து வரும். ஆக பத்து மணி என்னும் நேரம் அந்த நாளின் பத்தாவது நாழிகையும் ஆகும்.

இன்றைய நாள் எப்படி 2021

பண்டைய காலத்தில் நாழிகைஅறிந்த முறை:

பண்டைக் காலத்தில் பானையில் குறையும் நீர் போக எஞ்சிய நீர் நிற்கும் நீரின் அளவைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுச் சொல்லும் நாழிகைக் கணக்கர் அரசவையில் இருந்தனர். பொதுமக்கள் தன் நிழலைத் தானே அளந்து பார்த்துக் காலத்தைக் கணித்துக்கொண்டனர். சிலர் காட்டுப் புல்லை நிறுத்தியும் நாழிகையைக் கணக்கிட்டுவந்தனர். இரவு வேளையில் குறிப்பிட்ட சில விண்மீன்களைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர்.

நாழிகை ஒப்பீடு:

தமிழ்க் கணிய அளவை நடப்பில் உள்ள மேலையர் அளவை
24 நிமிடம் = ஒரு நாழிகை60 நிமிடம் = ஒரு மணி
60 நாழிகை = ஒரு நாள் 24 மணி = ஒரு நாள்

நாழிகை கணக்கு அட்டவணை – Naligai Calculation:

1 நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
60 நாழிகை = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
15 நாள் = 1 பக்ஷம் (பட்சம்)
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது (பருவம்)
3 ருது = 1 ஆயனம்
2 ஆயனம் = 1 வருடம்

 

நாளைய ராசி பலன்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்