உங்கள் வீட்டில் இந்த 3 இடத்திலும் உப்பை வையுங்கள்..! பணம் கஷ்டமே இருக்காது..!

pana kastam theera in tamil

பணக்கஷ்டம் தீர பரிகாரம்| Pana Kastam Neenga

வீடு என்றால் அதில் கஷ்டம் இல்லாமல் இருக்காது என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். யார் வீட்டில் தான் கடன் இல்லை எல்லாருடைய வீட்டிலும் சிறிய அளவு கடன் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனை சரி செய்ய தினமும் சம்பாதித்து கொண்டு தான் இருப்போம். ஆனால் அதனை வைத்து கடன் அடைக்கவும் அடுத்து கடன் வாங்கவும் என்று மாறிக்கொண்டு தான் இருக்கும். பணம் சம்பாதித்தாலும் அதனை சேமிக்க முடியவில்லை கடன் மட்டுமே அதிகரிக்கிறது. வீட்டில் பணம் சேர சில ஆன்மீக ரீதியாக பரிகாரத்தை இங்கு பார்ப்போம் வாங்க..!

Pana Kastam Neenga:

வீட்டில் கல் உப்பு இல்லாமல் இருக்க மாட்டோம். இன்று இந்த ஒரு பொருளை மட்டும் வீட்டில் 3 இடத்தில் வைத்தால் பணம் சேரும் அது எங்கு தெரியுமா? அது ஏன் உப்பை மட்டும் வைக்க வேண்டும் என்று கேட்பீர்கள். அதற்கு காரணம் உப்பை மஹாலட்சுமியில் மறு உருவமாக பார்க்கிறோம். வீட்டில் மகா லட்சுமி இருந்தால் லட்சமி கடாட்சம் பெருகும் ஆகவே அதனால் தான் உப்பை மட்டும் வைக்க சொல்கிறோம், வாங்க இப்போது வீட்டில் எந்த இடத்தில் உப்பை வைக்க வேண்டும் என்று பார்ப்போம்..!

காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

டிப்ஸ்:1

 பணக்கஷ்டம் தீர பரிகாரம்

முதலில் சொம்பு மாதிரி உள்ள மண் சட்டி முழுவதும் கல் உப்பை நிரப்பி அதன் மீது மஞ்சள் தூள், குங்குமம் சிறிதளவு மேல் தூவி மகாலட்சிமிக்கு போட்டு வைப்பது போல் நினைத்து வைக்க வேண்டும். அதனை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும் அதன் பின் 1 வாரம் அப்படியே இருக்கட்டும் அதன் பின் கரைத்து செடிகளில் ஊற்றிவிடலாம். வீட்டிற்குள் வெளியில் ஊற்றக்கூடாது.

டிப்ஸ்: 2

அதேபோல் மறுமுறையும் ஒரு குட்டி சைஸ் பானையில் உப்பு நிரப்பி மஞ்சள் தூள் குங்குமம் சேர்த்து உங்கள் வீட்டு குளியல் அறையில் மேல் புறம் செல்பியில் வைக்கவும்.

1 வாரம் அப்படியே இருக்கட்டும். அதன் பின் செடிகளில் கரைத்து ஊற்றிவிடவும்.  இப்படி ஏன் செய்ய வேண்டும் என்றால் நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் குளிக்கும் போது அழிந்துவிடும். ஆகவே தான் குளியல் அறையில் வைக்க வேண்டும்.

வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம்

டிப்ஸ்: 3

 பணக்கஷ்டம் தீர பரிகாரம்

ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக்கொள்ளவும். வேறு எதையும் பயன்படுத்தாதீர்கள். மண் டம்ளர் பயன்படுத்தலாம். அந்த டம்ளரில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு கொஞ்சம் சேர்த்து பின்பு அதில் மஞ்சள் தூள் தூவி வடமேற்கு திசையில் மேல் பக்கம் வைக்கலாம். அதனை வாரத்திற்கு ஒருமுறை மாற்றிவைக்க வேண்டும்.

இப்படி வைப்பதால் வீட்டில் கடன் பிரச்சனை நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

கல் உப்பு ஜாடியில் இந்த பொருளை வைத்தால் பண வரவு அதிகரிக்கும் கடன்கள் அடையும் வீண் செலவு குறையும்..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்