உடனடி பலன் தரும் பதிகங்கள் | Udanadi Palan Tharum Pathigam
வணக்கம் ஆன்மீக அன்பர்களே.. இன்றைய பதிவில் பலன் தரும் பதிகங்கள் பற்றி பார்க்கலாம்.. பதிகம் என்பது சிற்றிலக்கிய வகையில் ஒன்றாக இருக்கிறது. இது பெரும்பாலும் ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையினதாக அமைந்திருக்கும். வாங்க நீங்கள் மனதில் வேண்டி உடனடியாக பலன் கிடைக்க சில பதிகங்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
கோளறு பதிகம் பாடல் வரிகள் |
தடைப்பட்ட திருமணம் நடைபெற பதிகம்:
திருமருகலில் ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ என்று தொடங்கும்
ஞானசம்பந்தர் நல்கிய பதிகம் பாடலை பாடி வர ஆண் மற்றும் பெண்ணிற்கு ஏற்பட்ட திருமணம் தடை விலகும்.
சுப காரியத்திற்கான மங்கள பதிகம்:
ஞானசம்பந்தப் பெருமான் மதுரை வரை தேடிவந்த தம்
தந்தையார் சிவபாதஇருதயரைக்
கண்டு நெகிழ்ந்து தம் பிறவிக்குக் காரணமான பெற்றோரை
வணங்கிப் பாடிய
‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்ற திருக்கழுமலர் என்ற பதிகத்தை பாடி வரலாம்.
மலட்டு தன்மை நீங்க:
சம்பந்தப் பெருமான் ‘குறும்பை ஆண்பனை ஈனும்’ என்று பாடி
அதிசயம் நிகழ்த்திய திருவோத்தூர்ப் பதிகமும்,
மெய்கண்டதேவரின்
பெற்றோர் பாடிப் பேறுபெற்ற ஞானசம்பந்தரின் ‘கண்காட்டும்
நுதலானும்’ என்ற
திருவெண்காட்டுப் பதிகமும்.
பிரசவம் நலமாக நடைபெற பதிகம்:
சம்பந்தர் நல்கிய ‘நன்றுடையானைத் தீயதிலானை’ என்று
தொடங்கும்
பதிகமும், அப்பர் பெருமான் நல்கிய ‘மட்டுவார் குழலாளடு’
என்ற
பதிகமும். சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும்
தாயுமானவரைப் பாடியவையிவை என்ற பதிக பாடலை பாடி வர பிரசவம் நலமாக நடைபெறும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்க:
கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க
வேண்டி சம்பந்தர்
பாடியருளிய ‘துணிவளர் திங்கள்’ என்று தொடங்கும்
திருப்பாச்சிலாசிரமப்
பதிகம். திருச்சி – கரூர் பாதையில் வரும் திருவாசி என்று
பெயர் மருவிய
ஊரிது என்ற பதிகத்தை பாடி வருவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் வாதம், வலிப்பு நோய் மற்றும் பிற நோய்கள் முற்றிலும் நீங்கும்.
திருவாசகம் பாடல் வரிகள் |
விடம் தீர்க்கும் பதிகம்:
அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்
உயிர்ப்பித்தருள வேண்டி அவரில்லத்தில் எழுந்தருளியிருந்த
அப்பர் பெருமான்
பாடிய பதிகம்.
கண் பார்வை நீங்க பதிகம்:
சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சியேகம்பத்தில் அழுது வேண்டிப்
பார்வை மீண்ட
‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகம்.
உடலில் ஏற்படும், சொரி, படை, அம்மை நோய் குணமாக பதிகம்:
சுந்தரமூர்த்தியார் பாடி மீண்ட ‘மின்னுமா மேகங்கள்’ என்ற
வேள்விக்குடிப்பதிகம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் திக்குவாய், ஊமை குணமாக பதிகம்:
மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய ‘பூசுவதும் வெண்ணீறு’
என்று தொடங்கும்
திருச்சாழலெனும் பாடல்கள்.
லிங்காஷ்டகம் தமிழ் பாடல் வரிகள் |
புத்திர சோகத்திலிருந்து மீண்டு வர:
சுந்தரமூர்த்தியார் திருப்புக்கொளியூரெனும் அவிநாசி அருகே
மடுவொன்றில்
முதலை விழுங்கிய மதலையினை மீண்டும் உயிர்ப்பித்து மீட்ட
பதிகம்
சம்பந்தப் பெருமான் திருமயிலையில் பூம்பாவையை
மீண்டுமெழுப்பிய பதிகமும்.
மேலும் உள்ள பதிகத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்..நன்றி வணக்கம்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |