திதிகளும் அவற்றின் பலன்களும் | Pirantha Thithi Palangal in Tamil

Advertisement

பிறந்த திதி பலன்கள் | Thithi Palangal in Tamil

சந்திரனின் நகர்வை பொறுத்து திதிகள் காணப்படுகின்றன. ஒரு மாதத்தில் சந்திரனின் 14 நாட்களில் வளர்பிறை திதியும், 14 நாட்கள் தேய்பிறை திதிகளும் ஏற்படுகிறது மீதம் 2 நாட்களில் ஒன்று அமாவாசை, மற்றொன்று பௌர்ணமி ஆகிறது. இப்படி மாறி வரும் திதிகளில் பிறந்தவர்களுக்கான பலன்களையும், எந்த திதியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க.

Pirantha Thithi Palangal in Tamil:

பிரதமை:

  • பிறந்த திதி பலன்கள்: இந்த திதியில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன் பலமுறை யோசித்து செயல்படுவார்கள். பிரதமை திதியில் பிறந்தவர்கள் அம்பிகை கடவுளுக்கு நெய் படைத்து வணங்க வேண்டும்.
  • திதிக்கான தேவதை அக்னி பகவான். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் மகரம், துலாம். சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

துவிதியை:

  • பிறந்த திதி பலன்கள்: துவிதியை திதியில் பிறந்தவர்கள் நேர்மை குணம் கொண்டவர்களாகவும், உண்மையை மட்டும் பேசுபவர்களாக இருப்பார்கள். இந்த திதிக்கான கடவுள் பிரம்ம தேவன்.
  • கடவுளுக்கு சர்க்கரை படைத்து கடவுளை வழிபட வேண்டும். தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த திதியில் கவனமாக இருக்க வேண்டும். இந்த திதியில் அம்பிகையை வழிபடுவது நல்லது.

திரிதியை:

  • திரிதியை திதியில் பிறந்தவர்கள் நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் பொறுமையுடன் செய்ய மாட்டார்கள்.
  • கல்வி மற்றும் கலைகளை இந்த திதியில் செய்யலாம். கவனமாக செயல்பட வேண்டிய ராசிக்காரர்கள் சிம்மம், மகரம். அம்மனை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.

சதுர்த்தி:

  • Pirantha Thithi Palangal in Tamil: மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். அதிக ஆசை கொண்டவர்களாகவும், தங்களின் உடமைகளை ரகசியமாக கையாளும் தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
  • எம தர்மன் இந்த திதியின் கடவுள். ரிஷப, கும்ப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல பலன்கள் கிடைக்க விநாயகரை வழிபட வேண்டும்.

பஞ்சமி:

  • பிறந்த திதி பலன்கள்: பொன் ஆசை உடையவர்களாகவும், புத்திசாலியாகவும், நீண்ட நாள் வாழக்கூடிய ஆயுளை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
  • இந்த திதியின் கடவுள் நாகம். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். நாக தோஷம் தீர பஞ்சமி திதியில் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

சஷ்டி திதி:

  • Pirantha Thithi Palangal in Tamil: சஷ்டியில் பிறந்தவர்கள் செல்வந்தர்களாகவும், அதிக ஆற்றல் உடையவர்களாகவும், மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
  • இந்த திதியின் கடவுள் முருகன். சஷ்டி திதியில் மேஷம், சிம்மம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது நல்லது.

சப்தமி திதி:

  • மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்களாக இருப்பார்கள். நல்ல குணங்கள் நிறைந்தவர்களாகவும், மற்றவர்களை மதிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த திதியின் கடவுள் சூரிய பகவான்.
  • கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த திதியில் நாராயணரை வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

அஷ்டமி திதி:

  • பிறந்த திதி பலன்கள்: இந்த திதியில் பிறந்தவர்கள் நன்கு பேசக்கூடிய தன்மையையும், மனைவியின் பேச்சை கேட்டு நடப்பவர்களாகவும், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்களாகவும் இருப்பார்கள்.
  • இந்த திதிக்கான கடவுள் சிவ பெருமான். கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இந்த திதியில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபடுவது நல்லது.

நவமி திதி:

  • Pirantha Thithi Palangal in Tamil: புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உடையவராகவும், கலைகளை ஆர்வமுடன் செய்பவராகவும் இருப்பார்கள்.
  • இந்த திதிக்கான தேவதை துர்கை அம்மன். நவமி திதியில் சிம்ம, விருச்சிக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஸ்ரீ ராம பிரானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.

தசமி திதி:

  • புத்திசாலியாகவும், தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் தன்மை உடையவர்களாகவும், ஒழுக்கம் உடையாராகவும் இருப்பார்கள்.
  • எமதர்மன் இந்த திதிக்கான கடவுள் ஆவார். சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த திதியில் தேவியை வழிபட்டால் நல்லது நடக்கும்.

ஏகாதசி திதி:

  • ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் ஈட்டுவதில் இவர்களின் எண்ணம் இருக்கும். பெண்கள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
  • ஏகாதசி திதிக்கான கடவுள் ருத்திரன். இந்த திதியில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட தனுசு ராசிக்காரர்கள் பெருமாளை வழிபட வேண்டும்.

துவாதசி திதி: 

  • Pirantha Thithi Palangal in Tamil: துவாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்களாகவும், செல்வந்தவர்களாகவும் இருப்பார்கள். திதியின் தேவதை விஷ்ணு.
  • துவாதசி அன்று பிறந்தவர்கள் முருகனை வணங்குவது நல்லது. மகரம், துலாம் ராசிக்காரர்கள் இந்த திதியில் கவனமாக இருக்கவும்.

திரயோதசி திதி பலன்:

  • பிறந்த திதி பலன்கள்: திரயோதசியில் பிறந்தவர்கள் அமைதியான குணம் கொண்டவர்கள். நல்லவர்கள் அவர்களை சூழ்ந்து இருப்பார்கள். ரிஷபம், கும்பம் ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்கவும். சிவனை வழிபட வேண்டும்.

சதுர்தசி திதி:

  • Pirantha Thithi Palangal in Tamil: இந்த திதியில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் தாங்கள் நினைத்த காரியத்தை முடிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இந்த திதியின் கடவுள் காளியம்மன். இந்த திதியில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க பைரவரை வழிபடவும். இந்த திதியில் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்காரர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

பௌர்ணமி, அமாவாசை:

  • பிறந்த திதி பலன்கள்: பௌர்ணமியில் பிறந்தவர்கள், நல்ல சிந்தனை உடையவர்கள். அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேம்படுத்தி கொள்பவர்களாக இருப்பார்கள். பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் அம்மனை வழிபட வேண்டும்.
எந்த திதியில் என்ன செய்யலாம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement