புதன் வக்ர நிவர்த்தியால் 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது…

Advertisement

புதன் வக்ர நிவர்த்தி 2023

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தங்களின் ராசிகளில் பெயர்ச்சி அடையும். இதனை தான் கிரக பெயர்ச்சி என்று கூறுகிறோம். ஒவ்வொரு பெயர்ச்சியும் ராசிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மார்ச் 31-ம் தேதி பெயர்ச்சி அடைந்தார். ஏப்ரல் 21-ம் தேதி மேஷ ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்தார். நேற்று மே 15-ம் தேதி புதன் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் சில ராசிகளுக்கு மட்டும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், திடீர் பணவரவு ஏற்படும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

மீனம்:

மீனம்

புதன் உங்க ராசியில் 2-ம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பணவரவு  அதிகரிக்கும். பணியிடத்தில் மற்றவர்களிடம் பேசும் போது உங்களின் பேச்சை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம்  கிடைக்கும். புதன் வக்ர நிவர்த்தி அடைந்தாலும் ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட சனி பகவானை வழிபட வேண்டும். 

அலர்ட்டாக இருங்கள்..! யார் யார் தெரியுமா உங்கள் ராசி இருக்கானு கொஞ்சம் பாருங்க..!

தனுசு: 

தனுசு

புத்த தனுசு ராசியில் 7-ம் வீட்டிலும், 5-ம், வீட்டிலும் பெயர்ச்சி அடைகிறார். இதனால் உங்களின் வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். வேலை மற்றும் வாழ்க்கை சம்மந்தமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் உங்கலின் மதிப்பு அதிகரிக்கும். நீங்கள் எல்லா செயலையும் புத்தி கூர்மையுடன் செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள்.

கன்னி:

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் லக்ன அதிபதியாக இருக்கிறார். 8-ம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் பணியிடத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பரம்பரை சொத்துக்களை வாங்குவதற்கு நல்ல நேரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இந்த பணம் கைக்கு வராது என்ற நினைத்த தொகை கிடைக்கும்.

செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்

சிம்மம்:

சிம்மம்

சிம்ம ராசியில் 9-ம் வீட்டில் புதன் வக்ர நிலை அடைந்துள்ளார். பணி சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வருமானம் அதிகரிக்கும், இதனால் எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

கடகம்:

கடகம்

கடக ராசியில் 10-ம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். பணியிடத்தில் சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பணிக்காக வெளியூர் செல்வதால் நன்மைகள் கிடைக்கும். நீங்கள் பணியை மாற்ற வேண்டும் என்று நினைத்தால் இவை உகந்த நேரமாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பொறுமையாக கையாள வேண்டும்.

மிதுனம்: 

மிதுனம் ராசி

மிதுன ராசியில் 11-ம் வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் நீங்கள் ஏதும் முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து ஏதும் வாங்குவீர்கள். இதனால் வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக இந்த காரியம் அல்லது செயல் நடக்காது என்று தடைப்பட்டிருந்த காரியம் முடிவுக்கு வரும்.

குருவால் உருவாகும் ஹம்ச ராஜயோகம்.. இந்த ராசிக்காரர்களுக்கு அடித்த பம்பர் ஆஃபர்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement