முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருந்தால் இவ்வளவு அதிர்ஷ்டமா..?

Advertisement

மச்சம் பலன்கள் 

வணக்கம் இனிமையான நெஞ்சம் கொண்ட நேயர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் மச்சம் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். மச்சம் என்பது இயற்கையின் வரம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு இயற்கையாக மச்சம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல் பகுதிகளில் ஒவ்வொரு இடங்களிலும் மச்சம் இருக்கும்.

ஆன்மீகத்தின் மூலம் மச்சத்தை வைத்து ஒவ்வொருவரின் குணத்தை அறிந்து விடலாம். சிலருக்கு பிறக்கும் போதே மச்சம் இருக்கும். சிலருக்கு வளரும் போது மச்சம் தோன்றும். மச்சம் இருக்கும் இடத்தை வைத்து அவரின் அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ளலாம். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் மச்சத்தை வைத்து ஒருவரின் பலனை தெரிந்து கொள்வோம்.

பெண்களுக்கு கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்..!

எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்:

ஒரு மனிதனுக்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் மச்சம் இருக்கலாம். அந்த மச்சத்தை வைத்து அவருக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை சொல்லி விடலாம். நமது உடல் பாகங்களில் உள்ள மச்சங்களை அடிப்படையாக வைத்து ஒருவரின் பலன்களை சொல்ல முடியும். இப்பொழுது அதை பற்றி பார்ப்போம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் என்ன பலன்..? 

நெற்றியில் மச்சம் இருந்தால் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வலது நெற்றியில் மச்சம் இருந்தால் சிறுவயதிலேயே செல்வந்தராக வாழ்வார்கள்.

இடது நெற்றியில் மச்சம் இருந்தால் அதிகம் செல்வவளம் பெருகும். ஆனால் எவ்வளவு செல்வம் இருந்தாலும் மற்றவர்க்கு செய்யும் மனது இருக்காது.

புருவங்களில் மச்சம் இருந்தால் என்ன பலன்..? 

புருவங்களில் மச்சம் இருப்பவர்கள் அழகானவர்களாக இருப்பார்கள். இவர்கள் செல்வ செழிப்போடு வாழ்வார்கள். புருவத்தில் மச்சம் உள்ளவர்கள் யோகமானவர்கள்.

இவர்களுக்கு திருமணத்திற்கு பின் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் திடீர் அதிஷ்டங்கள் வந்து சேரும். இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் செலவுகள் ஏற்படும்.

பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..!

கண்களில் மச்சம் இருந்தால் என்ன பலன்..? 

வலது பக்க கண்ணில் மச்சம் இருந்தால் அவர்கள் பிரபலமானவர்களாக காணப்படுவார்கள். மற்றவர்களால் மதிக்கத்தக்கவராக திகழ்வார்கள். இவர்கள் பெரிய செல்வந்தராக இருப்பார்கள்.

இடது கண்ணில் மச்சம் இருந்தால் அவர்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். சுதந்திரமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

மூக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்..? 

மூக்கில் மச்சம் இருப்பவர்கள் அதிக கோவக்காரர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் மற்றவர்களிடம் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்துவார்கள். இவர்களிடம் பிடிவாத குணம் அதிகம் காணப்படும். இவர்கள் பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வார்கள்.

உதடுகளில் மச்சம் இருந்தால் என்ன பலன்..?  

உதடுகளில் மச்சம் இருந்தால் சரஸ்வதி தேவியின் பார்வை உங்கள் மீது இருக்கிறது என்று அர்த்தம். இவர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவராக இருப்பார்கள்.

இவர்கள் படிப்பின் மூலம் உயர்ந்த நிலையை அடைவார்கள். இவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள்.

கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்..?  

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் செல்வவளம் குறையாதவர்களாக வாழ்வார்கள். இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் சில துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். இவர்கள் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நாக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்..? 

நாக்கில் மச்சம் இருப்பவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உண்மை பேசுபவர்களாக இருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் நம்பும் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

செவிகளில் மச்சம் இருந்தால் என்ன பலன்..? 

வலது பக்க செவியில் மச்சம் இருந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இவர்கள் அனைவரிடத்திலும் அதிக பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். தொழிலில் சிறந்து விளங்குவார்கள்.

இடது பக்க செவியில் மச்சம் இருந்தால் அவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் 
Advertisement