மீன ராசிக்காரர்களின் வாழ்க்கை பலன் எப்படி இருக்கும்..!
ஹலோ நண்பர்களே. இன்று நம் ஆன்மீகம் பதிவில் எதை பற்றி பார்க்கப்போகிறோம் என்றுதானே யோசிக்கிறீர்கள். இன்று நாம் மீன ராசிக்காரர்களின் வாழ்க்கை மற்றும் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அதை தெரிந்துகொள்வோம்.
Meena Rasi Palan:
மீனா ராசியின் ராசி அதிபதி குருபகவான் ஆவர். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். மீனராசியின் நட்சத்திரங்களான பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதங்களும் மீனராசி குரியவைகளாகும். சம ராசியான இது பகலில் வலிமையுடையதாக இருக்கும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்களிடம் வீசிக்கொண்டே தான் இருக்கும்.
மிதுன ராசி குணங்கள் |
மீனம் ராசி குணங்கள்:
எப்பொழுதும் கற்பனை உலகில் மிதப்பவர்கள் தான் மீனராசியில் பிறந்தவர்கள். மீன ராசியில் பிறந்தவர்கள் இளகிய குணமும், திறமையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறந்தவர்கள் மற்றவர்களின் சந்தோசம் மற்றும் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைப்பவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தன்னுள் மறைத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றவரைபோல் அதாவது சமயத்திற்கு ஏற்றார் போல் மாறும் குணமுடையவர்கள். விரைவாக கெட்ட விஷயங்கள் மற்றும் கெட்ட சகவாசங்களுக்கும் அடிமையாகிவிடுபவர்கள்.
சிறுபிள்ளைகளை போல் ஏதாவது செய்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள். அவர்களிடம் சிறுபிள்ளைத்தனம் அதிகம் காணப்படும். மீனராசிக்காரர்கள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இருக்கும் இடத்தை அறிந்து இதமாகவும் இங்கிதமாகவும் பேசுபவர்கள். இவர்கள் எதையும் திட்டமிட்டு செய்பவர்கள். மீனராசிக்காரர்கள் சற்று பயந்த குணத்தை கொண்டவர்கள். மீனராசிக்காரர்கள் எந்த அளவுக்கு ஒருவரிடம் பழகுகிறார்களோ அதே போல் விரைவாக விலகவும் செய்பவார்கள். இவர்களை நம்பி எந்தவொரு விஷயத்திலும் இறங்க கூடாது.
ரிஷப ராசி குணங்கள் |
மீன ராசிக்காரர்கள் தனக்கு தானே தீமை செய்வதில் வல்லமை படைத்தவர்கள். அடிக்கடி வீண் விவாதங்களில் தலையிட்டு வீண் வம்பை விலைகொடுத்து வாங்குபவர்கள். இதனால் இவர்கள் இருக்கும் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மீன ராசிக்காரர்கள் தங்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்கு பிறரின் உதவியை தேடுவார்கள். இவர்கள் பேச்சாற்றல் கொண்டவர்கள் என்பதால் இவர்களிடம் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். சின்னசின்ன விஷயங்களை கூட பெரிய பிரச்சனையாக கொண்டு வருபவர்கள். மீன ராசிக்காரர்கள் சமயம் பார்த்து காலை வாரிவிடுபவர்கள்.
மீன ராசிக்காரர்கள் தனகாரகனான குருவின் ராசியில் பிறந்தவர்கள் என்பதால் பணத்தை விட மனம் தான் பெரியது என்று கூறுவார்கள். இவர்கள் முன் கோவம் அதிகம் கொண்டவர்கள். அதனால் தான் இவர்களை யாராவது அவமானப்படுத்தினால், அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களை விட்டு விலகியே இருப்பவர்கள். மீன ராசிக்காரர்கள் அவர்களின் மதிப்பிற்கும் மரியாதையும் எப்பொழுதும் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள்.
மீனம் ராசி திருமணம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் சுக வாழ்க்கையையே வேண்டும் என்று நினைப்பார்கள். மீனராசிக்காரர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் மணவாழ்க்கையும் அமையும்.
இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு சற்று தாமதமாகும். ஒரு சில நட்சத்திரகாரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் துணையின் உறவினர்களால் சில தேவையற்ற மனகுழப்பங்கள் ஏற்பட்டாலும் சொத்துக்கள் வந்துசேரும்.
வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் அன்யோன்யம் இருக்காது. இவர்களுக்கிடையே வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அமைதியும் குறையும். ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
மேஷ ராசி குணம் |
மீனராசி பொருளாதாரநிலை எப்படி இருக்கும்:
மீனராசிக்காரர்கள் வீட்டின் பொறுப்பை ஏற்று நடத்தும் இடத்தில் இருப்பார்கள். இதனால் சிறுவயதிலிருந்தே குடும்ப பொறுப்புகளை தலையில் வைத்து சுமப்பார்கள். இருந்தாலும் பணவரவுகளில் தட்டுப்பாடுகள் கிடையாது.
இவர்கள் சொந்த வாழ்க்கையை தன் சொந்த காலில் நிற்கவேண்டும் என்று நினைப்பவர்கள். மீனராசிக்காரர்கள் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் வாழவேண்டும் என்று நினைப்பார்கள்.
விலை உயர்ந்த பொருட்களையே வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். மீன ராசிக்காரர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவே நினைக்கும் தன்மை கொண்டவர்கள்.
குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும்:
மீனராசியில் பிறந்த அனைவருக்கும் குழந்தைபாக்கியம் கிடைப்பது இல்லை என்று தான் கூறவேண்டும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கை துணையால் குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
வாழ்க்கைத் துணையால் ஆசைக்கொரு பெண்ணும், ஆஸ்திக்கொரு ஆணும் பிறக்கும். அப்பிள்ளைகளால் மீன ராசிக்காரர்களுக்கு பெயரும், புகழும், செல்வமும், நிறைந்த செல்வாக்கும் சேரும்.
பல்லி விழும் பலன் |
மீனராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தருபவை:
எண்: 1,2,3,9,10,11,12.
கிழமை: வியாழன், ஞாயிறு.
திசை: வடகிழக்கு.
நிறம்: மஞ்சல், சிவப்பு.
கல்: புஷ்பராகம்.
தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |