யோகம் வகைகள் மற்றும் பலன்கள் | Yogam Vagaigal in Tamil

Yogam Vagaigal in Tamil

யோகம் வகைகள் | Types of Yogam in Tamil

யோகங்கள் என்பது கிரகங்கள் நமது ஜாதகத்தில் அமைந்துள்ள இடத்தை பொறுத்து கிடைக்கின்றன. இந்த யோகங்களை பொருத்து தான் நமக்கு நற்பலன்களும், தீய பலன்களும் கிடைக்கும். யோகங்களில் பல வகைகள் உள்ளது. நாம் இன்றைய ஆன்மிகம் பகுதியில் எத்தனை வகையான யோகங்கள் உள்ளது மற்றும் யோகம் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். யோகத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க யோகம் வகைகளை தெரிந்து கொள்வோம்.

யோகம் என்றால் என்ன?

 • கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது யோகம் ஏற்படும். அதாவது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது போன்ற நவகிரகங்கள் சேரும் போது ஏற்படுகிறது.
 • ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் எனப்படும். ஒருவரின் பண்புகளை அறிவதற்கு யோகங்கள் உதவுகிறது.
 • ஒருவரின் வாழ்க்கையில் யோகம் கிடைத்தால் அவர்களுக்கு பணம், பதவி, புகழ், மதிப்பு, மரியாதை, உயரும் என்பது ஜோதிடம். இவை நல்ல யோகத்தால் கிடைக்கும். சில அசுப யோகங்களும் உள்ளது அவற்றால் உங்களுக்கு தீய பலன்களும் கிடைக்கலாம்.

யோகம் வகைகள்:

யோகம் மொத்தம் 27 உள்ளது அவை:

Types of Yogam in Tamil
விஷ்கம்பம் பிரீதி
ஆயுஷ்மான் சௌபாக்கியம்
சோபனம் அதிகண்டம்
சுகர்மம் திருதி
சூலம் கண்டம்
விருத்தி துருவம்
வியாகதம் அரிசணம்
வச்சிரம் சித்தயோகம் 
வியாதிபாதம் வரியான்
பரிகம் சிவம்
சித்தம் சாத்தியம்
சுபம் சுப்பிரம்
பிராமியம் ஐந்திரம்
வைதிருதி

யோகம் வகைகள் | Yogam in Tamil

விஷ்கம்பம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தங்களுடைய எதிரிகளை வென்று சாதிக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை மதித்து நடப்பார்கள். எதிலும் தனித்துவமாக இருப்பார்கள்.

ப்ரீதி:

 • பிரீதி யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். நல்ல குணம் கொண்டவர்களாகவும், பிறருடன் கனிவுடன் பேசுபவர்களாக இருப்பார்கள்.

ஆயுஷ்மான்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் வாழக்கூடியவர்களாகவும், ஆன்மிகத்தில் அதிக பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் செல்வத்திற்கு குறைவு இருக்காது.

சௌபாக்கியம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நேர்மையுடன் வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுப வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.

சோபனம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்களுடைய இலட்சியமே ஆனந்தமாக இருப்பது தான். இவர்களுக்கு நட்பு வட்டாரம் அதிகம் இருக்கும்.

அதி கண்டம்:

 • இந்த யோகம் சற்று தீய பலன்களை கொடுக்க கூடியது. இதில் பிறந்தவர்கள் துன்பம் மிகுந்த வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் மட்டும் இன்றி தன்னை சுற்றி இருப்பவர்களையும் வேதனைப்படுத்துவார்கள்.

சுகர்மம்:

 • இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் “சுகர்மா” யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடப்பார்கள், இனிமையான வாழ்க்கையை வாழ்வார்கள்.

திருதி:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தைரியசாலியாக இருப்பார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் முழு முயற்சியுடன் செய்து வெற்றி காண்பார்கள்.

சூலம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். யாரிடமும் அனுசரித்து நடந்து கொள்ளமாட்டார்கள்.

கண்டம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. இவர்களின் எண்ணங்களும் நல்ல எண்ணங்களாக இருக்காது. மற்றவர்கள் மீது பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

துருவம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கள்ளம் கபடம் இல்லாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே சமயத்தில் தனக்கு தீமை விளைவித்தவர்களை பழிவாங்கும் குணம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

வ்யாகதம்:

 • முரட்டு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு தீமை செய்வதற்கு அஞ்சமாட்டர்கள். நல்லெண்ணம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

ஹர்ஷணம்:

 • செல்வ செழிப்பு, புகழின் உச்சத்தில் வாழ்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருக்கும். மற்றவர்களை மதிப்பார்கள்.

வஜ்ரம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதன் படி செயல்படுவார்கள்.

சித்தி:

 • தியானம், யோகம், யாத்திரை போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல எண்ணம் மற்றும் உதவி செய்யும் மனப்பாண்மை உடையவர்களாக இருப்பார்கள்.

வியதீபாதம்:

 • இவர்களுடைய வாழ்க்கையில் சவால்கள் நிறைய சந்திக்க வேண்டி வரும். தங்களை பற்றி மட்டும் தான் யோசிப்பார்கள், மற்றவர்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

வரீயான்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை வேலை வாங்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். பணிகளை விரும்பி மேற்கொள்வார்கள் அதனால் புகழின் உச்சத்தில் இருப்பார்கள்.

பரிகம்:

 • இவர்கள் வெற்றி வாகையை சூடுவதற்கு கடுமையாக உழைப்பார்கள். அதிகம் திறமை கொண்டவர்களாகவும், குறிக்கோள் உடையவராகவும் இருப்பார்கள்.

சிவம்:

 • இதில் பிறந்தவர்கள் சிவனின் மீது பக்தி உடையவர்களாக இருப்பார்கள். பெரியோர்களின் சொல் படி நடப்பது, திருத்தல பணிகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

சித்தம்: 

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மன தைரியம் அதிகமுடையவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயலையும் துணிவுடன் மேற்கொண்டு அதில் வெற்றி காண்பார்கள்.

சாத்தியம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் தன்னுடைய பேச்சின் மூலம் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு இவர்களிடம் அதிகம் இருக்கும்.

சுபம்:

 • இவர்கள் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரிடமும் சமநிலையுடனும், இன்முகத்துடனும் நடந்து கொள்வார்கள்.

சுப்பிரம்:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு கடவுளின் அனுகிரகம் அதிகமாக கிடைக்கும். அனைத்திலும் சாதனை படைப்பவர்களாக இருப்பார்கள். இனிமையான சுபாவம் உள்ளவர்கள்.

பிராம்மியம்:

 • இவர்கள் விவேகம் உடையவர்களாகவும் நல்ல சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உணவளிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஐந்திரம்:

 • இவர்களுக்கு நல்ல எண்ணம் மற்றும் தீய எண்ணம் இரண்டும் இருக்கும். செய்யும் செயல்களில் வெற்றியை பெறுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிது முன் கோபம் உள்ளவர்கள்.

வைதிருதி:

 • இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தற்பெருமை மற்றும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். மனதில் உறுதி அற்றவர்களாக இருப்பார்கள். தீய எண்ணம் சற்று இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
சுப யோகங்கள் மற்றும் அவற்றின் பலன்கள்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்