வக்ர சனி நிவர்த்தி அடைவதால் 3 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்களுக்கு மேல் கஷ்டம் வருமாம்

Advertisement

சனி வக்ர நிவர்த்தி 2022

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆன்மீக பதிவில் வக்ர சனி யாருக்கு முடிவு பெற்று அதனுடைய தாக்கம் யாரை அதிகம் பாதிக்கப்போகிறது என்பதை தான் பார்க்கிறோம். பொதுவாக சனி பெயர்ச்சி என்றால் முதலில் அனைவருக்கும் பயம் தான் ஏனென்றால் அவருடைய தாக்கத்தால் எவ்வளவு பாதிப்புகளும் பலன்களும் தரும்  என்பதை பார்த்துக்கொண்டு தான் வருகிறோம் ஆகவே அது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. சனி பெயர்ச்சி 3 கட்டமாக பிரிந்து நன்மையும் வழங்கும் தீமையும் வழங்கும். அதில் ஒரு கட்டமாக வக்ர பெயர்ச்சி என்று சொல்வார்கள். வக்ர பெயர்ச்சி எந்த ராசியிடமிருந்து எந்த ராசிக்கு செல்கிறது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

Sani Vakra Peyarchi 2022 Makaram:

நவகிரகங்களில் இருந்து மெதுவாக நகர்வது சனி பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றோரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வார். இவர் ஒரு ராசிகாரர்களுக்கு நன்மையை அளிப்பார் அதேபோல் கஷ்டத்தையும் அளிப்பார்.

அந்தவகையில் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு நுழைந்தார். தன் பின் ஜூன் மாதத்தில் கும்பத்தில் வக்ரமாகி, ஜூலை மாதத்தில் வக்ர நிலையில் மகர ராசியை அடைந்து பயணித்து வருகிறார். அவ்வாறு அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அவர் வக்ரம் பெற்று ஒருவகையில் நற்பலன்களை கொடுத்தாலும். சில ராசிக்காரர்களுக்கு கஷ்ட நஷ்டங்களையும் கொடுக்கிறார். வாங்க அது எந்தெந்த ராசி என்று பார்ப்போம்..!

கடகம்:

கடகம்

கடக ராசியில் 7 ஆம் வீட்டில் சனி வக்ரம் பெறுகிறார். இந்த வீடு வாழ்க்கை துணையின் வீடாகும். இதில் சனி பகவான் வக்ரம் பெறுகிறார் என்றால் அவர் தீமையை அளிப்பார். குறிப்பாக வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சில இழப்புகள் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு  சில வகையான நஷ்டங்கள் வரும். புதிதாக எந்த கூட்டு தொழிலையும் தொடக்காதீர்கள். அதேபோல் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கிவிட்டது அதனால் எதிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.

Sani Vakra Peyarchi 2022 Viruchigam:

Viruchigam

சனி வக்ர பெயர்ச்சி நிவர்த்தி அடைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்கள் மகிழ்ச்சிக்கு வாய்ப்புகள் இல்லை வேதனைக்கு குறைவு இருக்காது என்றும் சொல்லாம். 3 ஆம் வீட்டில் வக்ரம் அடைகிறார் 3 ஆம் வீடு சகோதர சகோதரிகளின் வீடு ஆகும். ஆகவே அவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்காது. பாட்டி தாத்தா சொத்து பிரச்சனை வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் வந்து சேரும். அர்த்தாஷ்டம சனி நடப்பதால் அனைத்து வேலையும் பாழாகும். பயணத்தின் போது ஜாக்கிரதையாவும் மெதுவாகவும் செல்லவும்.

சனி வக்ர பெயர்ச்சி 2022 மகரம்:

மகரம்

சனி பகவான் மகர ராசியின் அதிபதியாக இருந்தாலும் வக்ர பெயர்ச்சி நிவர்த்தி அடைவதால் சற்று வருத்தம் அளிக்கும். ஏனென்றால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சில தடைகள் ஏற்படும். கடைகள் சிறு தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் சற்று சவாலை சந்திக்கவேண்டி இருக்கும். கவனமாக வாகனங்களை ஓட்டுவது நல்லது விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

இந்த குரு வக்ர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையை மோசமாக மாற்றப்போகிறது

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement