விளக்கை அணைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

Advertisement

Vilakku Anaikkum Murai in Tamil 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் விளக்கை அணைக்கும் போது எப்படி அணைக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். நம் வீட்டில் விளக்கு ஏற்றுவது எவ்வளவு முக்கியமோ அதே போல் விளக்கை அணைக்கும் முறையும் முக்கியமானது. விளக்கு ஏற்றும் முறை அனைவரும் தெரிந்திருப்பீர்கள். ஆனால் விளக்கு அணைப்பதில் கூட இப்படி தான் அணைக்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் விளக்கை  வாயால் ஊதி அணைக்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிருப்பார்கள். மேலும் விவரங்களை இந்த பதிவில் மூலம் தெரிந்துகொள்வோம்.

விளக்கு ஏற்றும்போது எப்படி ஏற்ற வேண்டும் என்று தெரிந்துகொள்ள⇒ விளக்கு ஏற்றுவதில் உள்ள சாஸ்திரங்கள்

விளக்கு அணைக்கும் முறை:

 விளக்கை ஊதி அணைக்க கூடாது மற்றும் கையால் வீசி அணைக்க கூடாது. 

நம் வீடுகளில் விளக்கு ஏற்றி அணைக்கும் போது, விளக்கை அணைத்து விடவா என்று கேட்போம். அந்த வார்த்தையே பயன்படுத்தக்கூடாது. விளக்கை அணைத்து விடவா என்று கேட்காமல் விளக்கை மலையேற்றுகிறேன் என்று கேட்க வேண்டும்.

தீபத்தை குளிர வைப்பதற்கு முன்பு  மகாலட்சுமியை மனதார நினைத்து  எப்பொழுதும் வீடுகளில் வெளிச்சம் பிரகாசமாக மகாலட்சுமி ஜோதி வடிவில் எறிய வேண்டும், என்று நினைத்து நமஸ்காரம் செய்துவிட்டு தீபத்தை குளிர வைக்க வேண்டும்.

விளக்கை குளிர வைக்கும் போது கிடைக்கும் பொருளை கொண்டு அணைக்க கூடாது. வெள்ளி குச்சி பயன்படுத்தி அணைப்பது சிறந்தது. விளக்கிலிருந்து திரியை உள்பக்கம் இழுத்து விட வேண்டும்.

இனிப்பு சுவையான கற்கண்டை வைத்து விளக்கை குளிரவைப்பது சிறந்தது.

மாதுளை பழ குச்சி, நெல்லிக்காய் குச்சி, மருதாணி குச்சி இதை பயன்படுத்தி விளக்கை குளிர வைக்கலாம். இல்லையென்றால் வீட்டில் உள்ள மரத்திலிருந்து உள்ள குச்சிகளை வெட்டி  விளக்கை குளிர வைக்க பயன்படுத்தலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement