வைகுண்ட ஏகாதசி விரதம்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வைகுண்ட ஏகாதி விரதம் இருப்பதற்கு காரணம் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியானது சிறந்த ஒரு பண்டிகையாகும். நம்மில் சிலர் எப்படி சிவனுக்கு பிரதோஷ விரதம் இருக்கின்றமோ அதே போல் வைகுண்ட ஏகாதசி விரத்தமானது பெருமாளுக்கு எடுக்கப்படும் விரதமாகும். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசிக்கு முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றும் அழைப்பார்கள். அதோடு வைகுண்ட ஏகாதசியில் இறந்தவர்கள் எல்லாம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இவை எதற்காக எடுக்கப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
சஷ்டி விரதம் என்றால் என்ன..? |
வைகுண்ட ஏகாதசி விரத பயன்கள்:
வைகுண்ட ஏகாதசியானது ஆண்டிருக்கு ஒரு முறைதான் வரும். ஏகாதசி அன்று விரத்தம் எடுக்காதவர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் எடுப்பதால் சிறப்பான பலன்களையும், ஆசிர்வாதங்களையும் அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர்கள் தசமி அன்று ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதோடு ஏகாதசி அன்று தூய்மையான நீரில் குளித்து, அந்த நாள் முழுவதும் சாப்பிடாமல், நீரை மட்டும் குடித்து விரதம் இருந்து வந்தால் பல நன்மைகளும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருக்கும் பொழுது துளசியை மட்டும் பறிக்க கூடாது, அதற்கு முதல்நாளே துளசியை பறித்து வைத்துக்கொள்வது நல்லது. மேலும் விரதத்தின் போது துளசி இலைகளை ஏழு முறைகள் மட்டும் சாப்பிட்டு வரலாம்.
துளசி இலையானது வெப்பத்தன்மையை கொண்டது, வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வருவதால் குளிர்ந்து காணப்படுகிறது, இதனால் உடலுக்கு எந்த விதமான தீங்குகளும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தால் துளசி இலைகள் சாப்பிடப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதசி விரதம் முழுமையாக சாப்பிடாமல் இருப்பவர்கள் நெல்லிக்காய், வேர்க்கடலை, பழங்கள், பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்த பிறகு சாப்பிடுவது நல்லது.
வைகுண்ட ஏகாதசி இரவு முழுவதும் கண்விழித்தது புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு பாடல்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் துதிகள் போன்றவற்றை படித்து இரவு முழுவதும் உறங்காமல் இருந்துவிட்டு மறுநாள் காலை துவாதசி அன்று உணவு உட்கொள்வதை பாரணை என்றும் அழைக்கிறார்கள்.
முக்கியமாக துவாதசி அன்று உணவு சாப்பிட்ட பிறகு உறங்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதத்தை முடிக்கும் பொழுது உப்பு, புளிப்பு போன்ற சுவைகள் இல்லாத உணவுகளை சமைத்து கடவுளுக்கு படைத்துவிட்டு சாப்பிடுவதால் பலவகையான பலன்களையும் பெறுவதாக சொல்லப்படுகிறது.
இவை முழுவதையும் வைகுண்ட ஏகாதசியில் கடைபிடிப்பவர்கள் நீங்கள் செய்திருக்கும் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டத்தில் சேர்வார்கள் என்றும் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நோய் நொடிகள் இல்லாமல் வாழ்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் பொழுது உள்ளே செல்பவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் தீர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |