எந்த ஹோமம் செய்தால் என்ன பலன் | Types of Homam and its Benefits in Tamil

Advertisement

ஹோமம் வகைகள் | Types of Homam in Tamil

காலம் காலமாக யாகம், ஹோமம் வழக்கப்படுவது பாரம்பரியமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மற்றும் தனி நபருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து முழுவதுமாக விடுபட செய்வது தான் இந்த ஹோமம். நாட்டிற்கு  ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அந்த பிரச்சனையிலிருந்து விடுபட வழக்கப்படுவது தான் யாகம். ஹோமங்களில் பல வகையான ஹோமங்கள் இருக்கிறது. வாங்க அந்த ஹோமங்கள் வகைகளை நாம் இப்போது படித்தறியலாம்.

கஜகேசரி யோகம் பலன்கள்

கணபதி ஹோமம்:

நாம் ஏதேனும் நல்ல காரியம் தொடங்கும் முன் தடைபட்டு போனால் வீட்டில் கணபதி ஹோமம் செய்யலாம். கணபதி ஹோமம் செய்வதால் அந்த காரியம் வெற்றி அடையும்.

கணபதி ஹோமம் செய்ய தேவையான பொருட்கள்=>

சண்டி ஹோமம்:

நம்மை பிடித்த தரித்திரம் மற்றும் மனதில் உள்ள பயத்தின் காரணமாக நாம் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களிலும் தடை வந்துக்கொண்டே இருக்கும். மனதில் துணிவு பெற சண்டி ஹோமம் செய்யலாம்.

நவகிரஹ ஹோமம்:

ஒரு சிலருக்கு அவர்களுடைய ஜாதகத்தில் கிரக தோஷங்கள் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஜாதகத்தில் கிரக தோஷம் நீங்கி வாழ்க்கையில் நல்ல வளமும், மகிழ்ச்சியும் கிடைக்க நவகிரஹ ஹோமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சுதர்ஸன ஹோமம்:

நம் பகைவர்கள் நமக்கு வைத்திருந்த பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளை விரட்ட வீட்டில் சுதர்ஸன ஹோமம் செய்து வந்தால் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்.

ருத்ர ஹோமம்:

எப்போதும் ஒரு சிலர் அதிக கோபத்துடன் இருப்பார்கள். கோபம் குறைந்து ஆயுள் அதிகரிக்க ருத்ர ஹோமம் செய்யலாம்.

மிருத்யுஞ்ச ஹோமம்:

மாந்தி கிரகம் சனி பகவானின் மைந்தன் என அழைக்கப்படுகிறது. அதனால் அது அமைந்திருக்கும் இடம் தீய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தோஷம் நீங்க  மிருத்யுஞ்ச ஹோமம் செய்வது நல்லது.

கணபதி ஹோமம் பலன்கள்

புத்திர கமோஷ்டி ஹோமம்:

திருமணமாகி பல ஆண்டுகள் வரை ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த புத்திர கமோஷ்டி ஹோமத்தை செய்யலாம்.

சுயம்வரகலா பார்வதி ஹோமம்:

திருமண வயதில் உள்ள பெண்களுக்கு திருமண பேச்சு எடுத்தாலே தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமண தடை அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் கைக்கூட சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்து வரலாம்.

ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம்:

ஆண்களுக்கு ஏற்படக்கூடிய திருமண தடையை நீக்க ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் செய்து வரலாம்.

லக்ஷ்மி குபேர ஹோமம்:

வீட்டில் உள்ள கஷ்டங்கள், வறுமை அனைத்தும் குறைய லக்ஷ்மி குபேர ஹோமத்தை தாராளமாக செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

தில ஹோமம்:

சனி பகவானால் ஏற்பட்டிருக்கக்கூடிய தோஷங்கள், இறந்தவர்கள் நமக்கு கொடுத்து சென்ற சாபங்கள் நீங்க தில ஹோமத்தை கட்டாயமாக செய்ய வேண்டும்.

ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம்:

நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லைகள், உடலில் எந்த குறைபாடும் இல்லாமல் நெடுநாள் வாழ்வதற்கு இந்த ஸ்ரீப்ரத்யங்கிரா ஹோமம் செய்யலாம்.

ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம்:

நீங்கள் செய்கின்ற தொழில் நல்ல வளர்ச்சியடையவும், வியாபாரம் செழிப்படையவும், எடுத்த காரியங்கள் அனைத்தும் முழுமையாக வெற்றி பெற ஸ்ரீபிரம்மஹத்தி ஹோமம் செய்வது நல்லது.

கண் திருஷ்டி ஹோமம்:

கெட்ட குணம் கொண்டவர்களின் கண் திருஷ்டியால் குடும்பத்தில் அமைதி இல்லாத நிலை ஏற்படும். இதனால் பலருக்கும் உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இது மாதிரியான கண் திருஷ்டி, தோஷங்கள் அனைத்தும் விலக கண் திருஷ்டி ஹோமம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

காலசர்ப்ப ஹோமம்:

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து கஷ்டங்களிலும் மீண்டு வந்து சாதனை அடைய, பணியிடத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் விலக, திருமண தடைகள் நீங்குவதற்கு காலசர்ப்ப ஹோமம் செய்யலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement