2023 Kanni Rasi Palan
புத்தாண்டு வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் அனைவருக்கும் வருகின்ற புது வருடம் நமக்கு எப்படிப்பட்ட பலன்களை தரும் என்ற ஒரு ஆர்வம் இருக்கும். அத்தகைய பலன்களால் நமக்கு நல்லது நடக்குமா.? கெட்டது நடக்குமா.? என்று மனதிற்குள் நினைத்து பயப்படுவார்கள். ஆகையால் உங்களுக்கு பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவானது இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு 2023 புது வருடம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இன்று பார்க்கப்போகிறோம். நீங்கள் கன்னி ராசிக்காரர் என்றால் வாருங்கள் என்ன பலன்கள் என்று பதிவை தொடர்ந்து படித்து பார்க்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2023 ஆம் ஆண்டு இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது..! இதில் உங்கள் ராசி இருக்கா
2023 கன்னி ராசி பலன்:
2023 புது வருடமானது கன்னி ராசியில் பிறந்த அனைவருக்கும் சாதமான பலன்களை தரும் வருடமாக அமையபோகிறது. இந்த வருடம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சி அளிக்க கூடியதாக இருக்கும். அதற்கு நீங்கள் சிறிது காலம் பொறுமையுடன் இருந்தால் போதும் நினைத்து காரியங்களை எளிதில் செய்து முடிக்கலாம். பொருளாதார வளர்ச்சி 2023-ல் சிறப்பானதாக இருக்கும். ஆனால் எதிலும் கவனமாக இருந்து செயல்படுவது நல்லது.
கன்னி ராசி கல்வி:
கன்னி ராசி மாணவர்களுக்கு 2023 ஆரம்ப காலத்தில் சற்று சீரான பலன்களாக இருக்கும். ஆனால் நீங்கள் படிப்பில் உங்களுடைய முழுக்கவனத்தையும் செலுத்தி தொடர்ந்து படித்தால் நிச்சயம் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மேலும் ஜனவரி 17-ம் தேதி சனிபகவான் உங்களுடைய ராசியில் ஆறாம் வீட்டிற்கு வருவதால் நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பள்ளிப்படிப்பை முடித்து அடுத்த நிலைக்கு செல்லும் மாணவர்கள் தங்களுடைய விருப்பமான படிப்பில் சேர்வதற்கு விடா முயற்சி செய்ய வேண்டும்.
கன்னி ராசி தொழில்:
2023 வருடம் முதலில் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில் குருவும் ராகுவும் ஒன்றாக இணைந்து கன்னி ராசியின் 8– ஆம் வீட்டிற்கு செல்கின்றன. அதனால் நீங்கள் கவனமாக இருந்து வியாபாரத்தை செய்ய வேண்டும். அப்போது தான் நஷ்டம் ஏற்படாமல் இருக்கும்.
அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெறுவீர்கள்.
2023 ஆம் ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..? |
கன்னி ராசி காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்.?
கன்னி ராசிக்காரர்களுக்கு 2023-ல் காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஆனால் ஜனவரி 17-ற்கு பிறகு சனிபகவான் 6-ஆம் வீட்டிற்குள் நுழைவதால் உங்களுக்கு பிடித்த வாழ்க்கை அமைவதில் சிறிய மனஸ்தாபங்கள் வரும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் உங்களுக்கு பிடித்தவரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
மேலும் உங்களுடைய ராசியின் 5– ஆம் வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் இருப்பதால் ஏப்ரல் மாதத்திற்க்கு பிறகு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களுடைய காதல் வாழ்க்கை விரைவில் கைகூடுவதற்கு சாதமான சூழ்நிலை ஏற்படும்.
கன்னி ராசியின் திருமண வாழ்க்கை:
திருமணத்திற்கு வரம் தேடும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கண்டிப்பாக திருமணம் முடிந்து விடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஏப்ரல் 22-ம் தேதி வரை குரு உங்களுடைய ராசியில் 7-ஆம் வீட்டில் இருப்பதால் திருமணம் விரைவில் கைகூடும்.
அதே சமயம் ஏப்ரல் மாதத்தில் சூரியன், குரு மற்றும் ராகு ஆகிய மூன்றும் இணைந்து உங்களுடைய 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கன்னி ராசிக்காரரின் ஆரோக்கியம்:
2023-ல் கன்னி ராசிக்கார்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைக்க முடியும். வருடம் ஆரம்பத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை தந்தாலும் ஜனவரி 17-ற்கு பிறகு உங்களுடைய ராசியில் சனி 6-ஆம் வீட்டிற்கு வருவதால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். ஆனால் நீங்கள் வழக்கம் போல் இருக்காமல் இந்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |