குதிரை லாடம் வீட்டில் வைக்கலாமா | Astrology for Horse Metal Shoe in Tamil
அனைவருக்குமே பணம் பிரச்சனை மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது.. நமது அன்றாட விஷயங்களை பூர்த்தி செய்வதற்கு பணம் ஒரு முக்கியமான ஒன்றாகவும். ஆக பணம் வரவை அதிகரிக்க நாம் ஆன்மிக ரீதியாக பல வகையான விஷயங்களை மேற்கொண்டு தான் வருகிறோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது என்னவென்றால் குதிரை லாடம் பயன்படுத்தி வீட்டில் பணம் வரவை அதிகரிப்பது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க பணவரவை அதிகரிக்க குதிரை லாடம் பயன்படுத்தும் முறையை இப்பொழுது பார்க்கலாம்.
குதிரை லாடம் – Kuthirai Ladam Uses in Tamil:
நமது முன்னோர்கள் ஆடு, மாடு, குதிரை இது போன்ற விலங்குகளுக்கெல்லாம் இந்த லாடம் என்பதை பயன்படுத்தி உள்ளனர். விலங்குகளுக்கு கால்களில் பயன்படுத்தும் பொருள் எப்படி நமக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் குதிரை லாடம் பணம் வரவை அதிகரித்து தரும் ஒரு பொருள் என்று சொல்லலாம். தன ஆகர்சனங்கள் மொத்தம் 8 அவற்றில் ஒன்று தான் இந்த குதிரை லாடம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உப்பு மஞ்சள் கடுகு மூன்றில் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள்.. உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!
குதிரை லாடம் பயன்கள்:
குதிரை லாடம் பணம் வரவை அதிகரிக்கும் பொருள் என்பதால் கடைகளில் விற்கப்படும் குதிரை லாடத்தை வாங்கி வீட்டில் வைக்க கூடாது. குதிரை காலில் இருந்து நன்கு தேய்ந்து போன குதிரையின் லாடத்தை வாங்கி தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
இவற்றில் சில விதி முறைகளும் இருக்கிறது கருப்பு நிற குதிரையின் லாடத்தை வாங்கி தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் குதிரையின் வலது காலில் கட்டப்பட்ட லாடத்தை தான் நாம் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அந்த லாடம் நன்கு தேய்ந்து போயிருக்க வேண்டும்.
இப்படி நீங்கள் குதிரையின் லாடத்தை வாங்கினீர்கள் என்றால் முதலில் அந்த லத்தை துணியால் அல்லது எண்ணெய் போட்டு துடைத்து சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
பிறகு இந்த லாடத்தை மேல் படத்தில் கட்டியுள்ள போல் வீட்டின் நுழைவு வாசலுக்கு மேல் தெரிவது போல் வைத்து கொள்ளுங்கள். அல்லது கதவின் மேல் பகுதில் லாடத்தை மாட்டி வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அதாவது கண் திருஷ்டி விலகும். வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலகும்.
பணம் வரவு அதிகரிக்க – Astrology for Horse Metal Shoe in Tamil:
மேலும் வீட்டில் பணம் வரவு அதிகரிக்க இந்த குதிரை லாடத்தை நீங்கள் தூங்கும் அறையில் இந்த குதிரை லாடத்தை வைக்கலாம். இதன் மூலம் உங்கள் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும். குறிப்பாக படுக்கை அறையில் மட்டும் அந்த குதிரை லாடத்தில் 7 துளைகள் இருக்க வேண்டும். துளைகள் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் அதனை நீங்கள் வாசலில் தான் மாட்ட வேண்டும்.
படுக்கை அறையில் எங்கு இந்த குதிரை லாடத்தை மாட்ட வேண்டும் என்றால், நமது படுக்கை அறையில் எந்த திசையில் தலை வைத்து படுப்போம் அந்த திசையில் உள்ள சுவற்றில் இந்த லாடத்தை மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு மாட்டினால் மிக பெரிய அதிர்ஷ்டம் மற்றும் தன லாபம் கிடைக்க கூடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |