Athirstam Tharum karuppu vilangugal in Tamil
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பதிவில் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் கருப்பு விலங்குகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். சிலர் கருப்பு நிற ஆடை மற்றும் பொருட்கள் வைத்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் கருப்பு நிற விலங்குகள் வளர்க்க கொஞ்சம் யோசிப்பார்கள். ஏனென்றால் அது வீட்டிற்கு அதிர்ஷ்டமா.! அதிர்ஷ்டம் இல்லையா.! என்று நினைப்பார்கள். எனவே உங்களின் யோசனைக்கு இந்த பதிவானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் நண்பர்களே பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டிற்கு இந்த பூச்சிகள் வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் தெரியுமா..!
வீட்டிற்கு அதிர்ஷ்டம் தரும் கருப்பு விலங்குகள்:
கருப்பு நாய் வீட்டில் வளர்க்கலாமா:
நாய் பைரவரின் வாகனமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நன்றியை மறக்காத ஒரு பிராணியும் நாய் தான். அத்தகைய கருப்பு நிற நாய்களை நீங்கள் வீட்டில் வளர்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த நாய் உங்கள் வீட்டிற்கு வரும் ஆபத்துகளை அறிந்து அதனை தடுத்து நிறுத்தி உங்களை பாகாப்பாக வைக்கிறது. வீட்டிற்கு துருதிஷ்டம் வராமல் தடுக்கிறது என்று சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது.
கருப்பு மாடு:
கருப்பு நிற மாட்டை அதிகமாக கோவிலுக்காக நேர்ந்து விடுவார்கள். அத்தகைய மாட்டை உங்கள் வீட்டில் வளர்க்கும் போது அதிர்ஷ்டம் தேடி வரும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
கண்ணுக்கு தெரியாத பல பிரச்சனைகள் கூட மாட்டிற்கு தெரியும் என்பதால் அது உங்களை எப்போதும் கஷ்டம் இல்லாமல் வாழ வைக்கிறது.
கருப்பு பூனை வீட்டில் வளர்க்கலாமா:
கருப்பு நிற பூனையை உங்களுடைய வீட்டில் வளர்க்கலாம் என்று ஆன்மீகத்தில் சொல்கிறார்கள். ஏனென்றால் அது உங்கள் வீட்டில் உள்ள திருஷ்டியை போக்கி எந்த விதமான ஆபத்துகளும் வராமல் தடுக்கிறது.
உங்களுக்கு எதாவது தோஷங்கள் இருந்தாலும் இந்த கருப்பு நிற பூனையை வளர்ப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்று சொல்கிறார்கள்.
கருப்பு நிற மீன்:
சிலர் வீட்டில் மீன்கள் வளர்ப்பார்கள். ஆனால் அதில் கருப்பு நிற மீன்கள் அதிகமாக இருக்காது. ஆனால் கருப்பு நிற மீன் உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் கஷ்டங்கள் வராது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
உங்களுக்கு எதாவது பிரச்சனை வந்தால் கூட தன்னுடைய உயிரை கொடுத்து உங்களை காப்பாற்றும் தன்மை கொண்டது இந்த கருப்பு நிற மீன்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |