தீபாவளி அன்று இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பண கஷ்டமே எப்போதும் இருக்காது..!

தீபாவளி அன்று எதை செய்தால் வீட்டில் பணக்கஷ்டம்  வராது..!

வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது என்னவென்றால் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு ஆன்மிக தகவல் பற்றித்தான். அப்படி என்ன தகவல் என்றுதானே சிந்திக்கிறீர்கள் தீபாவளி அன்று எதை செய்தால் வீட்டில் பணக்கஷ்டமே எப்போதும் வராது..! என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம். அப்படி என்ன செய்ய வேண்டும் என்றுதானே யோசிக்கிறீர்கள். இந்த பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும்.

தீபாவளி அன்று என்ன செய்தால் வீட்டில் எப்போதும் பணவரவு அதிகமாக இருக்கும்:

deepavali andru seiya vendiyavai

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்பது தான் பொருள் அப்படி சிறப்பு மிக்க தீபாவளி அன்று  தீபம் ஏற்றுவதால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கும். அப்படி என்ன தீபம் ஏற்ற வேண்டும் எப்படி ஏற்றவேண்டும் மற்றும் எந்த  நேரத்தில் ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

 

முதலாவதாக இந்த தீபத்தை தீபாவளி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள் ஏற்ற வேண்டும். அப்படி அந்த நேரத்தில் ஏற்றுவதால் மிகவும் நல்லது. அப்படி உங்களால் தீபாவளி அன்று ஏற்ற முடியவில்லை என்றாலும் தீபாவளிக்கு மறுநாளும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம்.

அப்படி என்ன தீபம் ஏற்ற வேண்டும் என்றால் இந்த தீபம் ஏற்றுவதற்கு முதலாவதாக பூஜையறையில் ஒரு தட்டு எடுத்துக் வைத்துக்கொள்ளவும் முக்கியமாக பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பூஜை தட்டையே பயன்படுத்திக் கொள்வது மிகவும் நன்று.

deepavali andru seiya vendiyavai in tamil

பிறகு அந்த தட்டின் மேலே கல் உப்பை கொட்டி நன்கு தட்டு முழுவதும்  பரப்பிக்கொள்ளவும் முக்கியமாக ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கும் உப்பை பயன்படுத்தக்கூடாது புதிய உப்பையே பயன்படுத்த வேண்டும்.

deepavali andru seiya vendiyavai tamil

அதன் பிறகு அந்த உப்பின் மேலே ஒன்பது 1 ரூபாய் நாணயம் அல்லது 5 ரூபாய் நாணயத்தை வட்டமாக வைத்துக்கொள்ளவும். முக்கியமாக 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயத்தில் ஏதாவது ஒரு நாணயத்தையே ஒன்பது எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் கலந்து வைக்கக்கூடாது.

deepavali andru seiya vendiyavai enna in tamil

பின்னர் அந்த ஒன்பது நாணயத்தின் மீதும்  தனித்தனியாக ஒரு மல்லிகை  பூ அல்லது வாசனை உள்ள ஏதோ ஒரு பூவை வைக்க வேண்டும்.

pana kastam theera tamil

பிறகு அந்த தட்டிற்கு இருபுறமும் ஒரு விளக்கு வீதம்  கிழக்கு நோக்கி இரண்டு நெய் தீபம் ஏற்றுங்கள் நெய் இல்லையெனில் நல்லெண்ணெயை  பயன்படுத்தலாம். இந்த தீபத்திற்கு பஞ்சு திரி, தாமரை தண்டு திரி மற்றும் வாழைத்தண்டு திரி மூன்றையும் சேர்த்து திரியாக போட்டு ஏற்றலாம். அப்படி இல்லையெனில் பஞ்சு திரி  மட்டும் பயன்படுத்தி ஏற்றலாம்.

இந்த தீபத்தை ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாரை நோக்கி பிரார்த்தனை  மேற்கொள்ள வேண்டும் அதாவது  உங்க வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் தீரவேண்டும். மேலும் உங்கள் தேவை அனைத்தையும் நிறை வேண்டும் என்று  வேண்டி கொள்ளுங்கள்.

பிறகு 20 நிமிடத்திற்கு பிறகு அந்த விளக்கை குளிரவைத்து விடலாம் பிறகு தட்டில் உள்ள ஒன்பது நாணயங்களையும் எடுத்து உங்கள் வீட்டில் பணத்தை எங்கு வைப்பீர்களோ அந்த இடத்தில் இந்த நாணயங்களையும் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக இந்த நாணயங்களை செலவு செய்து விடாதீர்கள்.

அந்த நாணயத்தின் மீது வைத்திருந்த மளிகை பூவையும் நாணயத்துடனே வைத்துவிடுங்கள் அந்த பூக்கள் வாடிய பிறகு கால்படாத இடத்தில் தூக்கிபோட்டு விடலாம்.

பின்னர் அந்த தட்டில் உள்ள உப்பை சமையலுக்கு பயன்படுத்தும் உப்புடன் கலந்து சமையலுக்கு வைத்து பயன்படுத்தலாம்.

இதையும் பாருங்கள்=> கோடீஸ்வர யோகம் கிடைக்க தீபாவளி அன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் மற்றும் செய்யவே கூடாத இந்த 1 தவறு..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்