சனி வக்ர பெயர்ச்சி
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். ஜோதிடத்தில் நவ கிரங்களில் முக்கியமாக கருதப்படுபவர் சனி பகவான். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும். சனி பகவான் என்றால் பலரும் பயப்படுவார்கள். ஏனென்றால் சனி பல கஷ்டங்களை கொடுப்பார்கள். அதுவே சனி நிலை நல்லபடியாக இருந்தால் பல மகிழ்ச்சியான செய்திகளை அள்ளி தருவார்.
சனி பகவான் கடந்த ஜனவரி மாதம் பெயர்ச்சி அடைந்தார். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமடைகிறார். ஜூன் மாதம் 17-ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி பயணிக்கிறார். டிசம்பர் மாதம் தான் வக்ர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருந்தால் எல்லா ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும். அதனால் சனி வக்ர பெயர்ச்சி அடைவதால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
மகரம்:
மகர ராசிகளுக்கு இந்த நேரம் மிகவும் நல்ல செய்திகளை தரும். குடும்பத்துடன் நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் ஏதவாது சொத்து வாங்க வேண்டும் என்று நினைத்தால் இது உங்களுக்கு உகந்த நேரமாக இருக்கும். உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மேலும் புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாத செயல் அல்லது திட்டம் முடிவுக்கு வரும்.
மிதுனம்:
சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனைத்து விதத்திலும் நன்மையை தரும். நிதிநிலைமையில் நல்ல பலனை தரும். ஆனால் வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைத்தால் இந்த காலம் உங்களுக்கு உகந்த காலமாக இருக்கும். மேலும் செல்வ செழிப்போடு இருப்பீர்கள்.
ராகு கேது பெயர்ச்சியினால் இவர்களுக்குகெல்லாம் கஷ்ட காலம்.. |
ரிஷபம்:
நீங்கள் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் லாபம் அதிகமாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நீங்கள் ஆசைப்பட்ட வேலை கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காது. பணியில் நல்ல பலன்களை பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. வருமானம் அதிகரிக்கலாம். இதனால் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இது உங்களுக்கு உகந்த நேரமாக இருக்கும்.
சனியில் உருவாகும்.. இந்த யோகம்.. யாருக்கு நல்ல மாற்றம்.. யாருக்கு அதிர்ஷ்டம். |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |