எந்த ராசிக்காரர்கள் எந்த திசை பார்த்த வீடு யோகத்தை அள்ளித்தரும் தெரியுமா?

entha rasikku entha thisai

எந்த ராசிக்கு எந்த திசை வீடு அதிர்ஷ்டம்? தெரிந்து கொள்வோம் வாங்க..!

Entha Rasikku Entha Thisai – வணக்கம் நண்பர்களே..  இன்றைய பதிவில் நாம் என்ன பார்க்க போகிறோம் அப்படின்னா பலருக்கு ஜாதகம் நன்றாக இருந்திருக்கும், கிரகநிலைகள் நன்றாக இருந்திருக்கும், ராசி நட்சத்திரம் நன்றாக இருந்திருக்கும், தசாபுத்திகள் நன்றாக இருந்திருக்கும் எல்ல விஷயங்களும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர்களது வீடு அவர்களுக்கு சிறப்பாக இருந்திருக்காது. பலருக்கும் இருக்கும் கேள்வி என்னவாக இருக்கும் அப்படின்னா எனது ராசிக்கு என்ன திசையில் வீடு இருந்தால் எனக்கு விசேஷகரமாக, மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்ற கேள்வி தான். இருக்குறதே நான்கு திசைகள் தான் இந்த நான்கு திசைகளில் நான் எந்த திசையில் வீடு காட்டினாள் அல்லது இருந்தால் எனக்கு அதிர்ஷ்டகரமாக இருக்கும் என்று கேட்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. ஆம் நன்பர்களே எந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடு காட்டினாள் அல்லது இருந்தால் அதிர்ஷ்டகரமாக இருக்கும் அன்று தான் நாம் பார்க்க போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்கள் ராசிக்கு எந்த திசை பார்த்த வீடு அற்புதமான யோகம் தரும் | Entha Rasikku Entha Thisai

மேஷம் ராசிக்கு எந்த திசை வீடு:

மேஷம் ராசிக்காரர்களுக்கு தெற்கு முகம் மற்றும் கிழக்கு முகம் பார்த்து விட்டு காட்டினாள் அல்லது இருந்தால் அவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இதன் திசையில் வீடு அமைத்தால் உங்களுக்கு நல்ல மாற்றங்களையும், மகிழ்ச்சிகளையும் கொடுக்கும்.

ரிஷபம் ராசிக்கு எந்த திசை வீடு:

ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு முகம் பார்த்து வீடு கட்டுவது அல்லது கிழக்கு முகம் பார்த்த வீட்டில் இருப்பது உங்களுக்கு விஷேசகரமான பலன்களை கொடுக்கும்.

மிதுனம் ராசிக்கு எந்த திசை வீடு:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு திசை பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

கடகம் ராசிக்கு எந்த திசை வீடு:

கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு முகம் பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது நல்ல பலன்களை வழங்கும். அதேபோல் தெற்கு முகம் பார்த்து வீடு கட்டுவதும் உன்னதமான பலன்களை தரும்.

சிம்மம் ராசிக்கு எந்த திசை வீடு:

சிம்மம் ராசியில் பிறந்தவர்கள் கிழக்கு முகம் பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது மிகவும் விசேஷகரமாக இருக்கும்.

கன்னி ராசிக்கு எந்த திசை வீடு:

கன்னி ராசியில் பிறந்தவர்கள் வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து வீடு கட்டுவது மிகவும் சிறந்த பலன்களை கொடுக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல்..!

துலாம் ராசிக்கு எந்த திசை வீடு:

துலாம் ராசிக்காரர்களுக்கு கிழக்கு முகம் பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது மிகவும் விசேஷகரமான பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று சொல்லலாம்.

விருச்சிகம் ராசிக்கு எந்த திசை வீடு:

விருச்சிகம் ராசியில் பிறத்தவர்களுக்கு கிழக்கு மற்றும் தெற்கு திசை பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது நல்ல பலன்களை வாரி வழங்கும்.

தனுசு ராசிக்கு எந்த திசை வீடு:

தனுசு ராசிக்காரர்களுக்கு வடக்கு திசை பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது நல்ல முன்னேற்றகரமான பலன்களை வழங்கும். பணம் வரவை அதிகரித்து கொடுக்கும், மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கும்.

மகரம் ராசிக்கு எந்த திசை வீடு:

மகரம் ராசிக்காரர்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு திசையில் வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது நல்ல பலன்கள் அள்ளித்தரும்.

கும்பம் ராசிக்கு எந்த திசை வீடு:

குமபம் ராசிக்காரர்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு திசை பார்த்து வீடு கட்டுவது அல்லது வீடு அமைவது நல்ல வளர்ச்சிகரமான பலன்களை கொடுக்கும்.

மீனம் ராசிக்கு எந்த திசை வீடு:

மீனம் ராசிக்காரர்களுக்கு தொழில் செய்ய கூடிய இடம் தெற்காகவும், வீடு மனை காட்டக்கூடிய இடம் கிழக்கு அல்லது வடக்கு திசையாகவும் இருந்தால் மிக அற்புதமான பலன்களை கொடுக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள் 
SHARE